
தெஹிவளை – கல்கிசை நகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவரை கடந்த மே 5 ஆம் திகதி பொலிஸார் கைது செய்துள்ளனர். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெஹிவளை – கல்கிசை பொலிஸ் நிலையத்திற்குச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினர் சன்ன விகும் என்பவரின் சமூக ஊடக செயற்பாட்டாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டே குறித்த நபர் நகர சபைக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அதிகாரப்பூர்வ நியமனம் வழங்கப்பட்டிருந்ததற்கான எந்த ஆவணங்களும் கைது செய்யப்பட்ட அஷான் மதுஷங்க என்பவரிடம் இருந்து மீட்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸ் நிலையத்துக்கு சென்ற சஜித் பிரேமதாச, அஷான் மதுஷங்கவின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அரச நிறுவனத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த குறித்த நபர் அங்கு காணப்பட்ட கணினி, தொலைநகல் இயந்திரங்கள் மற்றும் பிற தொடர்பாடல் சாதனங்களை பயன்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான நபருக்காக எதிர்க்கட்சித் தலைவர் நேரடியாக தலையீடு செய்திருப்பது தொடர்பில் அரசியல் ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அரச நிறுவனங்களில் குழப்பநிலைகளை உருவாக்குவதற்காக இத்தகைய நபர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாமா என்ற கோணத்திலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments