
ஈரானுடன் ஒரு பிரம்மாண்ட அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டிருப்பதாக டிரம்ப் அறிவித்து அடுத்த நாளே அமெரிக்கா இராணுவம் பாரசீக வளைகுடா பகுதியில் ஈரானின் தெற்குப் பகுதி வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது.
அமெரிக்காவின் அதிநவீன MQ-9 ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியது மட்டுமின்றி, தமது வான் எல்லைக்குள் ஊடுருவிய அமெரிக்காவின் அதிநவீன உளவு ட்ரோனான 'RQ-4' மற்றும் 'F-35' போர் விமானத்தின் மீதும் ஈரானியப் படைகள் சரமாரியாகத் தாக்குதல் நடத்தின!
தென் ஈரானிலுள்ள ஏவுகணைத் தளங்கள் மற்றும் படகுகள் மீது அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே ஈரான் இந்த அதிரடித் தாக்குதலை நடத்தியதாக ஈரான் குறிப்பிடுகின்றது.
இரு நாடுகளுமே தற்காப்புக்காகவே தாக்குதல் நடத்தினோம் என்று கூறினாலும், இந்த மோதல்கள் அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் கேள்விக் குறியாக்கியுள்ளன.
கைச்சாத்திடப் போகும் இந்த அமைதி ஒப்பந்தத்தை வேரோடு இல்லாமல் ஆக்குவதற்காக இஸ்ரேல் திரைமறைவில் செயல்படுகின்றது; அந்த திரைமறைவுச் செயலே அமெரிக்க இராணுவத்தின் இந்தத் தாக்குதல்; பொதுவில் அமெரிக்க இராணுவத்தை தூர இருந்து இயக்குவது இஸ்ரேல்தான்!
வெளியாகும் நம்பத்தகுந்த தகவல்களின்படி, கைச்சாத்தாகப் போகும் ஒப்பந்தம் ஈரானுக்கு சாதகமாகவும், அமெரிக்காவுக்கு அவமானமாகவும், இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் உருவெடுக்கும் என்று ஹேஷ்யம் கூறப்பட்டு வருகின்றது.
வரலாற்று ரீதியாக, தங்களின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று வரும் பட்சத்தில், எந்த உடன்படிக்கைகளையும் இஸ்ரேல் பொருட்படுத்தாது. எதிரி பலமடைவதை இஸ்ரேல் வேடிக்கை பார்க்கவும் மாட்டாது.
உலகளாவிய கச்சா எண்ணெய்ப் போக்குவரத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான முழுக் கட்டுப்பாட்டை ஈரான் தொடர்ந்து தன் வசம் வைத்திருக்க கைச்சாத்திட இந்த ஒப்பந்தம் அனுமதிப்பதாகவும், ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த கடுமையான பொருளாதாரத் தடைகள் அனைத்தும் தளர்த்தப்படவுள்ளதாகவும், சர்வதேச வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஈரானின் பில்லியன் கணக்கான டொலர்கள் மதிப்புள்ள சொத்துக்களை மீண்டும் ஈரானிடமே ஒப்படைக்கப் படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அணு ஆயுதப் பாதையில் பயணிக்கும் ஈரானுக்கு எந்தவொரு முட்டுக்கட்டையும் போடாமல் கைச்சாத்திடப்படவுள்ளதாகக் கூறப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் ஆரம்பத்திலிருந்தே சந்தேகம் கொண்டிருந்த ஈரான், இந்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் முட்டுக் கட்டையாக இருக்கப் போகின்றது என்று திடமாக நம்பியது.
எப்போதும் ஈரானுக்கு எதிராகக் கடுமையான போக்கைக் கடைப்பிடித்து, அதிகபட்ச அழுத்தத்தைக் கொடுப்பதாக கொக்கரித்த டொனால்ட் டிரம்ப், இப்போது ஈரானிடத்தில் முற்றிலுமாகப் பணிந்துபோவது ஈரானை மட்டுமல்ல முழு உலகைச் சிந்திக்க வைத்தது எனலாம்.
ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முடக்காத எந்தவொரு ஒப்பந்தமும் தங்களின் அழிவிற்கு வழிவகுக்கும் என்பதை இஸ்ரேல் நன்கு அறியும். அதனால், இந்த ஒப்பந்தத்தால் இஸ்ரேல் எவ்வகையிலும் மகிழ்ச்சியடையப் போவதில்லை; தங்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இந்த அமைதி ஒப்பந்தத்தை எப்படியாவது சிதைக்க தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தலாம் என்று நம்பப் பட்டது; அந்த நம்பிக்கை இப்போது உண்மையாகி விட்டது.
இனி சமாதான ஒப்பந்தம் எதற்கு என்று ஈரான் இப்போது திட்ட,வட்டமாக அறிவித்து விட்டதுமல்லாமல், ஒப்பந்தத்தை விட்டும் வெகு தூரம் விலகிப் போயுள்ளதுபோல் தோன்றுகின்றது!
புனித மக்கமா நகரில் ஹஜ் கடமைகளைத் தொடங்கியுள்ள நிலையில், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ஆட்சி அதன் இறுதி அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்கள் வழியாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "இந்தப் பிராந்தியத்திலலுள்ள இஸ்லாமிய நாடுகளும் அதன் மக்களும் இனி அமெரிக்காவின் ராணுவத் தளங்களைப் பாதுகாக்கும் 'கேடயங்களாக'த் தங்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க மாட்டார்கள். அமெரிக்கா தனது சதித்திட்டங்களையும், தீமைகளையும் அரங்கேற்ற மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இனி பாதுகாப்பான புகலிடங்களை வைத்திருக்க முடியாது!" எனவும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது!
செம்மைத்துளியான்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments