
America White House Gun Shoot: அமெரிக்க வெள்ளை மாளிகையில் இன்று திடீரென துப்பாக்கிச்சூடு நடந்தது. துப்பாக்கிச்சூடு நடத்திய 21 வயது இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். நடத்திய நபர் யார்? அவரின் அதிர்ச்சி பின்னணி குறித்தும் இங்கு காணலாம்.
America White House Gun Shoot: அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே 21 வயது இளைஞர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பு உண்டானது. ரகசிய சேவை அதிகாரிகள் அவரை நோக்கி பதில் தாக்குதல் நடத்தியதில் அவருக்கு குண்டடி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
மேரிலாண்ட் பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞரின் பெயர் நசிரே பெஸ்ட். இவர் துப்பாக்கிசூடு மேற்கொண்டதன் காரணம் இன்னும் உறுதியாக தெரியவில்லை. அவருக்கு மனநிலை பிரச்னை இருப்பதாக கூறப்படுகிறது.
வெள்ளை மாளிகை அருகே நடந்தது என்ன?
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு நுழைவுவாயில் அருகே இந்திய நேரப்படி இன்று காலை 5 மணியளவில், தனது பேக்கில் இருந்து துப்பாக்கியை எடுத்து துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டிருக்கிறார். உடனே அதிகாரிகள் பதில் தாக்குதல் தொடுத்துள்ளனர், அதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தின்போது அருகில் இருந்து மற்றொரு நபரும் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தார். ஆனால், நசிரே பெஸ்ட் துப்பாக்கிச்சூட்டில் அவர் காயமடைந்தாரா அல்லது அதிகாரிகள் பதில் தாக்குதல் நடத்தியதில் காயமடைந்தாரா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை என அதிகாரிகளால் கூறப்படுகிறது.
யார் இந்த நசிரே பெஸ்ட்?
வெள்ளை முக்கிய நுழைவுச் சாவடிகளில் சுற்றித் திரிவது இந்த இளைஞரின் வழக்கமாக இருந்துள்ளதாக தெரிகிறது. வெள்ளை மாளிகையில் இருந்து விலகி இருக்க வேண்டும் என நீதிமன்றம் அவருக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறது, ஆனால் அதையும் அவர் மீறியிருக்கிறார். இவர் யார்? அவருக்கு ஏன் நீதிமன்றம் இத்தகைய உத்தரவு பிறப்பித்தது என்பதை இங்கு காணலாம்.
மனநல சிகிச்சை பெற்றவர்
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம், நசிரே பெஸ்ட் என்ற இந்த இளைஞர், சாலையில் வாகனப் பொறுத்தவரை தடுத்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அவரது விருப்பமின்றி, கட்டாயமாக மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
மேலும் படிக்க | ராக்கெட் வேகத்தில் சீறி பாயும் ஜப்பான் ரயில்... மணிக்கு 603 கி.மீ வேகம் - வியப்பில் உலக நாடுகள்.!
இரண்டு முறை கைது
முதல் சம்பவம் நடந்து, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இன்னொரு சம்பவத்தையும் அவர் செய்தார். 2025 ஜூன் 10ஆம் தேதி அன்று, வெள்ளை மாளிகையின் பாதசாரிகளுக்கான கட்டுப்பாட்டுப் பகுதியைத் தாண்டி, வெளியேறும் நுழைவுவாயில் வழியாக இவர் அத்துமீறி சென்றதற்காக, அவர் கைதானார்.
இயேசு கிறிஸ்துவின் நவீன அவதாரம்
அதிகாரிகள் அவரை கைது செய்தபோது, அவர் சொன்ன விஷயம்தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, இயேசு கிறிஸ்துவின் நவீன அவதாரம் தான் நான் என அவர் அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறார்.
'கைதாக விருப்பம்'
கைது செய்யப்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவரே அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். இவை அனைத்தின் மூலமும் அவர் மனநலன் ஆரோக்கியமாக இல்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் இதனாலேயே அவர் கைதாகி விடுதலையாகியிருக்கிறார் என்பதும் தெரிகிறது.
வெள்ளை மாளிகையில் இருந்த டிரம்ப்
இன்று துப்பாக்கிச்சூடு நடந்தபோது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையின் உள்ளேதான் இருந்தார், ஆனால் அவரது பாதுகாப்பில் எவ்வித சிக்கலும் இல்லை. சம்பவ இடத்தை பாதுகாப்பு அதிகாரிகள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர், அங்கு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அங்கு செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
செய்தி சுருக்கம்
துப்பாக்கிச்சூடு: அமெரிக்க வெள்ளை மாளிகை ரகசிய சேவை பாதுகாப்பு நுழைவுவாயில் அருகே திடீர் துப்பாக்கிச்சூடு நடத்திய 21 வயது இளைஞர் நசிரே பெஸ்ட், ரகசிய சேவை பாதுகாப்பு அதிகாரிகளின் பதில் தாக்குதலில் காயமடைந்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.
மனநல பிரச்னை: தனது இயேசு கிறிஸ்துவின் நவீன அவதாரம் என கூறிகொண்டு, ஏற்கெனவே 2025ஆம் ஆண்டில் ஒரே மாதத்தில் 2 முறை கைதாகி மனநல சிகிச்சை பெற்றவர். எனவே, இவர் வெள்ளை மாளிகை நுழைவுவாயில் அருகே செல்லக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இன்று அதை மீறி சென்றிருக்கிறார்.
ஒருவர் பாதிப்பு: இந்த சம்பவத்தில் பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் இருந்தார், எனினும் அவரது பாதுகாப்பில் சிக்கல் ஏதுமில்லை.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments