
உலகின் மிகக் குளிரான இந்த கிராமத்தில் தினமும் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை மிகவும் வித்தியாசமாக இருக்கும். உதாரணமாக, இங்குள்ள மக்கள் குளிர்காலத்தில் தங்கள் கார்களின் இன்ஜினை ஒருபோதும் அணைப்பதில்லை. அணைத்துவிட்டால் அதனை மீண்டும் காரை இயக்குவது மிகவும் கடினம்.
ஓய்ம்யாகோன் எலும்பை உறைய வைக்கும் அதன் குளிருக்காக உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. இங்கு சராசரி குளிர்கால வெப்பநிலை சுமார் -50°C. 1933-ல் இங்கு வெப்பநிலை -67.7°C வரை குறைந்திருந்தது. மனிதர்கள் வசிக்கும் இடங்களில் இதுவரை பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை இதுதான். இங்கு காற்றில் ஈரப்பதம் இல்லை. குளிர் மிகவும் கடுமையாக இருப்பதால், உடலின் எந்த பகுதியாவது குளிரில் வெளிப்பட்டால் உடனே உறைந்துவிடும்.
இந்தக் கிராமம் ஓய்ம்யாகோன் தாழ்நிலம் எனப்படும், கிண்ணம் போல இருக்கும் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. அதனால் இங்குள்ள குளிர் காற்று வெளியேற முடியாமல் அங்கேயே சிக்கிக்கொள்கிறது. இதனால் மற்ற இடங்களை விட இங்கு வெப்பநிலை மிகவும் குறைவாக இருக்கிறது. அக்டோபர் முதல் மார்ச் வரை இங்கு சூரிய ஒளி மிகவும் குறைவாக இருக்கும். அந்த மாதங்களில் மக்கள் சூரிய ஒளியைப் பார்க்கவே முடியாமல் தவிக்கிறார்கள்.
ஓய்ம்யாகோனில் சுமார் 500 முதல் 2000 பேர் வரை வசிக்கின்றனர். அவர்கள் தினமும் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை மிகவும் வித்தியாசமாக இருக்கும். உதாரணமாக, இங்குள்ள மக்கள் குளிர்காலத்தில் தங்கள் கார்களின் இன்ஜினை ஒருபோதும் அணைப்பதில்லை. அவர்கள் இன்ஜினை அணைத்துவிட்டால், எண்ணெயும் இயந்திரப் பகுதிகளும் உறைந்துவிடும். மீண்டும் காரை இயக்குவது மிகவும் கடினம்.
இந்த கிராமம் உலகின் மிகக் குளிரான கிராமம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இங்குள்ள நிலம் எப்போதும் பனிக்கட்டியாக உறைந்திருக்கும். அதனால் இங்கு தரையினுள் குழாய்களைப் போட முடியாது. வீடுகளில் உள்ள கழிப்பறைகள் வீட்டுக்கு வெளியே இருக்கும் குழிக் கழிப்பறைகள். வீட்டுக்குள் தண்ணீர் குழாய்கள் கிடையாது. ஓய்ம்யாகோன் முழுக்க ஒரு குழாய் கூட இல்லை என்று சொல்லலாம். குழாய்கள் இல்லாததால் வடிகால் வசதி, நீர் விநியோகம் எதுவும் இல்லை. குடிநீர் கொள்ள மக்கள் பனிக்கட்டித் துண்டுகளை வீட்டிற்குள் கொண்டு வந்து உருக்கி, அதை குடிப்பதற்கும் சமைப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள்.
இங்கு மிகவும் குளிராகவும், தண்ணீர் வசதி இல்லாததாலும் விவசாயம் செய்ய முடியாது. ஒரு புல் கூட இங்கு வளராது. இங்குள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு இறைச்சி, மீன் போன்ற அசைவ உணவுகளையே நம்புகிறார்கள். அவர்கள் குதிரைகள், மாடுகள், கலைமான்களை வளர்க்கிறார்கள். உறைந்துள்ள நீரூற்றில் ஒரு குழி தோண்டி மீன் பிடித்து, அதை சமைத்து சாப்பிடுகிறார்கள்.
இங்குள்ள வெப்பநிலை, மக்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றை பார்த்தால், இந்த கிராமத்தின் பெயரின் அர்த்தம் கேட்டு நீங்கள் ஆச்சரியப்படலாம். உள்ளூர் மொழியில் ‘ஓய்ம்யாகோன்’ என்றால் ‘உறையாத நீர்’ என்று பொருள். இந்த கிராமத்தில் இருக்கும் ஒரு வெந்நீர் ஊற்றின் காரணமாக இந்தப் பெயர் வந்தது. அந்த ஊற்றின் நீர் ஒருபோதும் பனிக்கட்டியாக மாறாது. குளிர்காலத்தில் இங்கு வாழ்வது மிகவும் கடினம், சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தாகவும் இருக்கும். ஆனால் கோடைக்காலத்தில் சில சமயம் இங்கு வெப்பநிலை 30°C வரை உயரும். இருந்தாலும், பூமிக்குள் இருக்கும் பனிக்கட்டி உருகாது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments