
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் 2026 மோதலுக்குப் பிறகு, ஆர்சிபி வீரர் டிம் டேவிட் செய்ததாகக் கூறப்படும் ஒரு செயல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராய்ப்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கடைசி பந்தில் ஆர்சிபி வெற்றி பெற்ற பிறகு, டிம் டேவிட் நடுவிரலைக் காட்டி சைகை செய்ததாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
முன்னதாக மூன்று சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய டிம் டேவிட், 2025 ஏலத்தில் ஆர்சிபி அணியால் எடுக்கப்பட்டார். தனது பழைய அணிக்கு எதிரான இந்த முக்கியமான போட்டியில் அவர் 'கோல்டன் டக்' (முதல் பந்திலேயே அவுட்) முறையில் ஆட்டமிழந்தார். இந்த ஏமாற்றத்தின் வெளிப்பாடாகவே அவர் இத்தகைய தகாத சைகையைச் செய்திருக்கலாம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து பிசிசிஐ (BCCI) அல்லது ஐபிஎல் நிர்வாகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்தப் போட்டியைப் பொறுத்தவரை, கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், புவனேஷ்வர் குமார் அடித்த சிக்ஸர் மற்றும் ரசிக் சலாம் தார் ஆட்டத்தை முடித்து வைத்த விதம் ஆர்சிபி அணிக்கு மறக்க முடியாத வெற்றியைத் தேடித்தந்தது.
இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதே நேரத்தில், இந்தப் தோல்வியால் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக ப்ளே-ஆஃப் ரேசிலிருந்து வெளியேறியுள்ளது.
மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்தப் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. டிம் டேவிட்டின் வைரல் வீடியோ குறித்த உண்மைத் தன்மை இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், இது குறித்த காரசாரமான விவாதங்கள் இணையத்தில் தொடர்ந்து வருகின்றன.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments