Ticker

6/recent/ticker-posts

China | டீ போடுவது தொடங்கி இயந்திரங்கள் சரிபார்ப்பு வரை... அசத்தும் சீன ரோபோக்கள்!


சீனாவின் தொடர்ந்து வரும் இந்த ரோபோ சேவைகள், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் வியப்பையும் பெற்று வருகிறது.

சீனாவில் நடைபெற்ற ரோபோ கண்காட்சியில் ரோபோ ஒன்று தேநீர் மற்றும் பாப்கான் தயாரித்துள்ளது.

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் Greater Bay Area பகுதியில் சர்வதேச ரோபோ கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஏ.ஐ. ரோபோக்கள் மனிதர்கள் அன்றாடம் செய்யும் வேலைகளைச் செய்கின்றன.

அந்த வகையில், தேநீர் வழங்குவது, பாப்கான் தயாரிப்பது உள்ளிட்ட வேலைகளைச் செய்வது மட்டுமின்றி, தொழிற்சாலையில் மனிதர்கள் செய்யும் வேலைகளையும் இந்த ரோபோக்கள் செய்கின்றன. இந்த ரோபோக்கள் இயந்திரங்களில் ஏற்படும் பழுதுகளையும் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் சரிசெய்யும் என வல்லுநர்கள் தெரிவித்தனர்.

ஏற்கெனவே சீன ரோபோடிக்ஸ் நிறுவனமான UNI TREE, உலகின் முதல் மனித வடிவ இயந்திர உடையை அறிமுகப்படுத்தியது. "GD01" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அதிநவீன இயந்திர உடை, மனிதர்களின் சராசரி உயரத்தை விட இரண்டு மடங்கு பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதேபோல சீனாவின் கிழக்கே உள்ள ஆன்ஹுய் மாகாணத்தில் முதல் முறையாக ரோபோக்களுக்கான பிரத்யேக விற்பனை மையம் திறக்கப்பட்டது. அங்கு 100-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் ஒரே கூரையின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. இதில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சேவை, மருத்துவம், கல்வி, பொழுதுபோக்கு எனப் பல துறைகளில் பயன்படுத்தப்படும் ரோபோக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சீனாவின் தொடர்ந்து வரும் இந்த ரோபோ சேவைகள், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் வியப்பையும் பெற்று வருகிறது.

news18


 


Post a Comment

0 Comments