Ticker

6/recent/ticker-posts

உலகின் முதல் வீரராக... வைபவ் சூரியவன்ஷி படைத்த சரித்திர சாதனை! - நியூ 'சிக்ஸ் கிங்' மட்டுமல்ல.. அதற்கும் மேல்! | Vaibhav Sooryavanshi


Vaibhav Suryavanshi | ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியில் 29 பந்துகளில் 97 ரன்கள் விளாசிய வைபவ் சூரியவன்ஷி உலகின் முதல் வீரராக புதிய சாதனை ஒன்றை படைத்து சரித்திரத்தில் இடம்பிடித்தார்.

ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியில், ஹைதராபாத்தை வீழ்த்தி, ராஜஸ்தான் அணி 2வது தகுதிச்சுற்று போட்டிக்கு முன்னேறியது. நியூ சண்டிகரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தான் சார்பில் தொடக்க வீரராக களம் கண்ட இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, ஹைதராபாத் பந்துவீச்சாளர்களை மைதானத்தின் 360 டிகிரிக்கும் சிதற அடித்தார்.

16 பந்துகளில் அரைசதம் விளாசிய அவர், 3 ரன்களில் சதத்தை தவறவிட்டார். 29 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 12 சிக்சர்களை பறக்கவிட்டார். சூர்யவன்ஷியை தொடர்ந்து ஜூரலும் 20 பந்துகளில் அரை சதம் விளாச அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் சேர்த்தது.

தொடர்ந்து விளையாடிய ஹைதராபாத், ஆட்டத்தின் 2வது பந்திலேயே அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா விக்கெட்டை இழந்தது. ஹெட் 17 ரன்களிலும், இஷான் கிஷன் 33 ரன்களிலும் வெளியேற ஹைதராபாத்தின் தோல்வி உறுதியானது. நிதிஷ் குமார் 38 ரன்களும் சலில் அரோரா 35 ரன்களும் எடுத்த நிலையில் ஹைதராபாத் அணி 19.2 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 47 ரன்களில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி, நாளை நடைபெறும் 2வது தகுதி சுற்று போட்டியில், குஜராத்தை எதிர்கொள்கிறது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர், டி20 கிரிக்கெட்டின் ஜாம்பவான் கிறிஸ் கெய்லின் நீண்டகால சாதனையை முறியடித்து, ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற புதிய உலக சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார்.

இதற்கு முன்பு கடந்த 2012ஆம் ஆண்டு சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய கிறிஸ் கெய்ல் 59 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இன்றைய ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக சூர்யவன்ஷி 53 சிக்சர்களை அடித்திருந்தார். இந்நிலையில் இன்று மேலும் 12 சிக்சர்கள் அடித்து 65 சிக்சர்களுடன், ஒரு சீசனில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை சூர்யவன்ஷி ஏற்படுத்தியுள்ளார்.

அதேபோல், 15 வயதிலேயே டி20 தொடரில் 600 ரன்கள் எடுத்த உலகின் முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார் வைபவ். இளம் வயதில் ஒரு டி20 தொடரில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில், வைபவ்வுக்கு அடுத்த இடத்தில் தேவ்தத் படிக்கல் உள்ளார். 2019-20 ஆம் ஆண்டு சையத் முஷ்டாக் அலி கோப்பைத் தொடரில் கர்நாடகா அணிக்காக தேவ்தத் படிக்கல் 580 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச சாதனையாக இருந்தது. அப்போது படிக்கலுக்கு 19 வயது. இதனை 15 வயதிலேயே தகர்த்திருக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி.

இதற்கிடையே, வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் பிளேஆஃப் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் சாதனையை வைபவ் சமன் செய்துள்ளார். 2014 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ரெய்னா 16 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். தற்போது சூர்யவன்ஷி அந்த சாதனையை சமன் செய்துள்ளார்.

news18


 


Post a Comment

0 Comments