
சபை களைந்தது ஒவ்வொருத்தரும் ஆறத்தழுவி விடை பெற்றுக் கொண்டனர் அரண்மனை வைத்தியர் தன் பேத்தியை அணைத்து உச்சி முகர்ந்து விட்டு தழதழத்த குரலிலேநாட்டாமை மனைவியின் கரங்கள் மேல் பேத்தியின் கரத்தை வைத்து தாய் இல்லாப் பிள்ளை மா இனிமேல் நீங்கள் தான் அவள் தாய் என்றார் .
உடனே அந்த அம்மா ஐயோ ஏன் ஐயா தாங்கள் கலங்குவது என் பிள்ளை போலே பார்த்துக் கொள்வேன் கவலை வேண்டாம் தைரியமாக இருங்கள் என்று ஆறுதல் கூறி நந்திகாவை தன்னோடு அணைத்துக் கொண்டு சிறு புன்னகை புரிந்தார் அவளும் புன்னகைத்தாள் தாத்தாவுக்கு ஆறுதல் கூறி விடை பெற்றுக் கொண்டாள்.
இனி என்ன குமரனும் சக நண்பர்களிடம் இருந்து விடை பெற்று தன் துணைவியாரோடு சொந்தக் கிராமம் நோக்கி தாய் தந்தையின் பின்னே சென்றான் அதே போன்று ஏனைய மருத்துவர்களும் தத்தமம் ஊர் நோக்கிப் பயணிக்கலானார்கள்.
அன்றோடு அரண்மனை வாழ்க்கை முடிவுக்கு வந்தது எல்லோருக்கும் தங்கள் குடும்பம் உறவுகளை சந்திங்கும் சந்தோசத்தோடு புறப்பட்டார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அவர்களையும் அவர்களின் பொகிகளையும் சுமந்து கொண்டு குதிரை வட்டிகள் வரிசை கட்டிச் சென்றது.
அவர் அவர் வசிப்பிடம் இறக்கி விட்டு மீண்டும் அரண்மனை நோக்கிப் புறப்பட்டன வண்டிகள் அனைத்தும் குமரனுக்கு தன் கிராமத்தில் பிரமாண்டமான வரவேற்புக் காத்திருந்தது அவனைக் கண்டதும் வெடி ஓசையுடன் மேளதாலங்கள் முழங்கமிட ஊர் கூடி திருஷ்ரி சுத்தி இல்லத்திலே அழைத்துக் கொண்டு அமர விட்டு வாழ்த்துக் கூறி விடை பெற்றார்கள்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments