Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-40


குறள் 196:

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி யெனல்.

பயனற்ற சொற்களைப் பேசுவோனை மக்கள் பதரென்பார், மானிடராய் அன்று.

குறள் 197:

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று.

அறமற்ற சொற்களைச் சொன்னாலும் சான்றோர் பயனற்ற சொல்தவிர்த்தல் நன்று.

குறள் 198:

அரும்பய னாயும் அறிவினார் சொல்லார் பெரும்பய னில்லாத சொல்.

அரிய பயன்களை ஆயும் அறிஞர் பயனற்ற சொல்சொல்லார் பார்.

குறள் 199:

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர்.

தெளிந்த அறிவுடைய மாசற்றோர் சொல்லார் பயனற்ற சொற்களைத் தான்.

குறள் 200:

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்.

நல்ல பயனுள்ள சொற்களைச் சொல்லவேண்டும்! இல்லையேல் சொல்லாதே இங்கு

(தொடரும்)


 


Post a Comment

0 Comments