Ticker

6/recent/ticker-posts

19 வயது இளம்பெண்ணிடம் பாலியல் துஷ்பிரயோகம் – மொட்டுக் கட்சி உறுப்பினர் கைது


19 வயதுடைய இளம்பெண்ணிடம் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அரநாயக்க பிரதேச சபையின்அசங்க தீபால் பதுவத்த என்பவர் மவனெல்லை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள அவர், அரநாயக்க தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) பிரதான அமைப்பாளராகவும், அரநாயக்க பிரதேச சபை உறுப்பினராகவும் செயல்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் தகவலின்படி, மவனெல்லை கெகிரிகொட பகுதியில் வாடகை வீட்டொன்றில் அவர் ஒரு தேவாலயத்தை நடத்தி வந்துள்ளார். அங்கு தாயாருடன் வந்திருந்த 19 வயது இளம்பெண்ணை தனியாக உள்ளே அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து இளம்பெண் தனது தாயாரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இருவரும் மவனெல்லை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மவனெல்லை பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

lankatruth


 


Post a Comment

0 Comments