
உலகக் கிண்ணக் காற்பந்தில் முதல் முறையாகக் களமிறங்கியுள்ளது காபோ வெர்ட்.
"H" பிரிவு குழுச்சுற்று ஆட்டத்தில் அது ஸ்பெயினுக்கு எதிராக ஆடியது.
ஆட்டம் முடியும் வரையில் ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. 27 முறை கோல் போட முயன்றது.
ஆனால் பலன் இல்லை.
ஆட்டம் கோல் ஏதுமின்றி சம நிலையில் முடிந்தது.
மற்றுமொரு "H" பிரிவு ஆட்டத்தில் சவுதி அரேபியாவும் உருகுவேயும் மோதின.
ஆட்டத்தின் 41ஆவது நிமிடத்தில் சவுதி அரேபியா அதன் முதல் கோலைப் போட்டு முன்னணிக்குச் சென்றது.
சவுதி அரேபியாவின் தற்காப்பு ஆட்டத்தை முறியடிக்க உருகுவே கடுமையாகப் போராடியது.
2022 உலகக் கிண்ணப் போட்டியில் அர்ஜென்ட்டினாவுக்கு எதிராகத் தமது முதல் குழுச்சுற்று ஆட்டத்தில் சவுதி அரேபியா வெற்றி கண்டது.
அதே போல இம்முறையும் வாகை சூடும் என்ற எதிர்பார்ப்பு வலுவாக இருந்த நிலையில் 80ஆவது நிமிடத்தில் உருகுவே கோல் போட்டது.
இறுதியில் 1 - 1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சம நிலையில் முடிந்தது.
சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை 3 மணிக்கு 'G' பிரிவில் உள்ள பெல்ஜியம், எகிப்து அணிகள் சந்தித்தன.
அந்த ஆட்டமும் சமநிலையில் முடிந்தது.
அணிகள் தரப்புக்கு ஒரு கோல் போட்டன.
மற்றுமொரு 'G' பரிவு ஆட்டத்தில் ஈரானும் நியூசிலந்தும் மோதுகின்றன. ஆட்டம் காலை 9 மணிக்குத் தொடங்கியது. தற்போதிய நிலவரப்படி ஆட்டம் 1 - 1 என்ற கோல் எண்ணிக்கையில் சம நிலையில் நீடிக்கிறது.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments