Ticker

6/recent/ticker-posts

அமெரிக்காவின் 20 முகாம்கள் அழிக்கப்பட்டன…


அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிராக போரைத் தொடங்கிய பின்னர், வளைகுடா பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ முகாம்களில் 20 முதல் 28 வரையான முகாம்கள் எதிர்தாக்குதல்களில் அழிக்கப்பட்டுள்ளதாக புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

இங்கிலாந்தில் செயல்படும் “மகார் பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனம்” செயற்கைக்கோள் படங்கள் மற்றும் புலனாய்வு அறிக்கைகளை பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளிப்பட்டதாக கூறப்படுகிறது. வளைகுடா பிராந்தியத்தில் உள்ள 8 நாடுகளில் அமைந்திருந்த முகாம்களே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன.

அந்த நாடுகளில் இருந்த அமெரிக்க இராணுவ முகாம்களில் இருந்த வான்வழி பாதுகாப்பு அமைப்புகள், எரிபொருள் சேமிப்பு வசதிகள், தொடர்பு மையங்கள், போர் விமானங்கள் மற்றும் கட்டிடங்கள் அனைத்தும் ஈரானின் எதிர்தாக்குதல்களில் அழிக்கப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

குறிப்பாக, உலகளவில் 8 இடங்களில் நிலைநிறுத்தப்பட்டிருந்த 8 தாட் (THAAD) ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளில் 3 அழிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவின் 42 போர் விமானங்கள் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அந்த பாதுகாப்பு ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.

lankatruth


 


Post a Comment

0 Comments