
ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் கருத்துப் பதிவிட்ட குவைத் அரசுத் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஜெய்னப் தஸ்தி Zainab Dashti என்ற அந்த செய்தி வாசிப்பாளா், அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரானைத் தாக்கியது தொடா்பாக ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடங்களில் சில கருத்துகளைப் பதிவிட்டாா். குவைத்தில் உள்ள அமெரிக்க நிலைகள் உள்பட பல இடங்களை ஈரான் தாக்கிய நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ஷைனப் பதிவிட்டது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு குவைத்தில் கடந்த சில மாதங்களாக அதிகம் விவாதிக்கப்பட்ட விஷயமாக இருந்தது.
இந்நிலையில், ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட குற்றச்சாட்டில் ஷைனப் தஸ்திக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜனநாயக ஆதரவாளா்களும், மனித உரிமை ஆா்வலா்களும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments