Ticker

6/recent/ticker-posts

சரண குணவர்தன குற்றவாளி என தீர்ப்பு – 4 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிப்பு


ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர் மீது இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் இந்த தீர்ப்பை வழங்கினார்.

இதன்படி, சரண குணவர்தனவுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ. 1.8 மில்லியன் அபராதமும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பின் தண்டனை விவரங்கள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் தற்போது நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரண குணவர்தன தேசிய லாட்டரி சபையின் தலைவராகப் பணியாற்றிய போது, 2006ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்திற்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளின் தீர்ப்புகள் மே 26ஆம் திகதி அறிவிக்கப்படவிருந்த நிலையில், தீர்ப்புகள் தயாராகவில்லை என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹால் நீதிமன்றத்திற்கு அறிவித்ததுடன், தீர்ப்பு வழங்கும் திகதியையும் ஒத்திவைத்திருந்தார்.

இதனையடுத்து, இந்த நான்கு வழக்குகளின் தீர்ப்புகளும் ஜூன் 9ஆம் திகதியான இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டன.

lankatruth


 


Post a Comment

0 Comments