
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனுவின் தீர்ப்பு, பிறிதொரு தினத்தில் அறிவிக்கப்படுமென உயர் நீதிமன்றம் நேற்று (23) தெரிவித்துள்ளது.இந்த மனு நேற்று (23) செவ்வாய்க்கிழமை விசாரிக்கப்பட்டு நிறைவுக்கு வந்திருந்தது. இதையடுத்தே, இது குறித்த தீர்ப்பை பின்னர் அறிவிப்பதென உயர் நீதிமன்றம்தீர்மானித்தது.
அனர்த்த இடர்பாடுகளில் பயன்படுத்தவென நெதர்லாந்து அரசாங்கம் வழங்கியிருந்த வாகனத்தை தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் பௌசிக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான விசாரணைகள் பிரதம நீதியரசரான பிரீதிபத்மன் சூரசேன தலைமையில்,ஜனக டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபயசேகர ஆகியோரடங்கி நீதிபதிகள் குழாத்தினரால் விசாரிக்கப்பட்டு வந்தது. இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்ரா ஜயரத்னவால்,இந்த மனு முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
thinakaran

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments