
உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணை, இனியும் ஈரானின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலேயே தொடரும் என்று ஈரானின் தலைமை பேச்சுவார்த்தையாளர் முஹம்மத் பாகர் காலிபாஃப் உறுதியாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
“ஹோர்முஸ் ஜலசந்தி இனி போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பாது. சர்வதேச சட்ட விதிகளுக்கு இணங்க, இந்த முக்கிய கடற்பாதை ஈரானின் நிர்வாகத்தின் கீழேயே இருக்கும்,” என்று காலிபாஃப் வலியுறுத்தினார்.
சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் நகரில் நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் பல முக்கிய முன்னேற்றங்களை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, ஹோர்முஸ் ஜலசந்தி வழித்தடப் பாதுகாப்பு, லெபனான் நிலவரம், ஈரானிய எண்ணெய் மீதான தடைகள் தளர்த்தப்படுவது, முடக்கப்பட்ட நிதிச் சொத்துக்களை விடுவிப்பது போன்ற அம்சங்களில் சாதகமான முடிவுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி ஆய்வாளர்களை மீண்டும் நாட்டுக்குள் அனுமதிக்க ஈரான் சம்மதித்துள்ளதாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரானிய எண்ணெய் மீதான சில தடைகளைத் தற்காலிகமாக தளர்த்தியுள்ளது.
மேலும், பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த சில பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்படுவதுடன், முடக்கப்பட்டிருந்த நிதிச் சொத்துகளும் விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முன்னேற்றங்கள், நீண்டகாலமாக பதற்றம் நிலவி வந்த மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதிய இராஜதந்திர அத்தியாயத்திற்கு வழிவகுக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments