அமைதியான மக்கள் போராட்டத்தின் மூலம் ராஜபக்ச குடும்ப ஆட்சியை அகற்றிய பின்னர், பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டதாக கூறப்படும் சிறப்பு நடவடிக்கைகள் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சுகீஷ்வர பண்டார தலைமையில் ரணில் விக்ரமசிங்க ஒரு “சிறப்பு திட்ட பிரிவு” ஒன்றை இயக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த பிரிவுக்கு அரச அதிகாரிகள் உட்பட 136 பேர் இணைக்கப்பட்டதுடன், 16 வாகனங்களும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த திட்டப் பிரிவின் ஊழியர்களுக்கான சம்பள செலவாக மட்டும் 17 கோடி ரூபாவுக்கு மேல் செலவிடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த சிறப்பு திட்ட பிரிவு உண்மையில் எந்த வகை பணிகளை மேற்கொண்டது என்பது குறித்து இதுவரை முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments