Ticker

6/recent/ticker-posts

நள்ளிரவில் உலாவும் மர்ம நிழல்


காரைக்கால் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் சிசிடிவி கேமராவில் பதிவான மர்ம உருவம் ஒன்றின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காரைக்காலில் உள்ள ஒரு தெருவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், நள்ளிரவு 1:15 மணியளவில் ஆள் நடமாட்டமற்ற வீதியில் கறுப்பு நிறத்திலான மர்ம நிழல் உருவம் ஒன்று மெதுவாக நடந்து வருவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

அந்த உருவம் வீதியின் நடுவே வந்து சில நொடிகள் அசையாமல் நிற்பதும், பின்னர் மெதுவாக மறைவது போலவும் அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. 

இந்த மர்ம உருவம் தோன்றும் அதே விநாடியில், அப்பகுதியில் உள்ள தெரு நாய்கள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து வித்தியாசமான முறையில் அலறியபடி குரைக்கும் சத்தமும் அந்த சிசிடிவி பதிவில் கேட்கிறது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, "காரைக்காலில் கேமராவில் சிக்கிய பேய்" என்ற தலைப்பில் நெட்டிசன்கள் பலரால் இது வேகமாகப் பகிரப்பட்டு பீதியை கிளப்பி வருகிறது.

எனினும், இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நெட்டிசன்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மத்தியில் மாற்று கருத்துகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இரவு நேரங்களில் சிசிடிவி கேமராக்களின் லென்ஸ் அல்லது கண்ணாடியின் மீது மிகச் சிறிய பூச்சிகள் அல்லது சிலந்தி வலைகள் ஊர்ந்து செல்லும்போது, 'இன்பிராரெட்' (Infrared) ஒளியின் காரணமாக அவை பெரிய நிழல் உருவங்கள் போலக் காட்சியளிப்பது வழமை என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நள்ளிரவில் பூனைகள், எலிகள் அல்லது அந்நிய நபர்களின் நடமாட்டத்தைக் கண்டு நாய்கள் குரைத்திருக்கலாம் என்றும், அதை இந்த மர்ம நிழல் உருவத்தோடு இணைத்து மக்கள் கற்பனை செய்வதாகவும் சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

tamilmirror


 


Post a Comment

0 Comments