Ticker

6/recent/ticker-posts

கலியாணச் சந்தை!


மூன்று முடிச்சு போட்டுக்க 
யாருமில்லை.
தாலி சுமக்கும் பாக்கியம் 
கிடைக்கவில்லை.

மஞ்சள் கயிற்றுக்கு 
வரமில்லை.
மாற்று மாலை 
மாறியதுமில்லை.

மாமியார் நாத்தனார் 
உறவும் எனக்கில்லை.
மாங்கலிய வாழ்க்கை 
அமங்கலியான பிள்ளை.

முற்றியும் சந்தையில் 
விலையாகாத முல்லை.
கல்யாணக் கற்பனை 
கண்ணீரோடு கரைத்த கிளை.

காரணம் தான் என்ன
 நானோ முதிர்க்கன்னியான சிலை.
இன்னும் தேரவில்லை
கலியாணச் சந்தையிலே விலை.

ஆர் .எஸ் . கலா

 


Post a Comment

1 Comments