
துபாயில் செல்வந்தர்களுக்காகவே நடத்தப்பட்ட ஹோட்டல்களின் வியாபாரம் நலிவடைய தொடங்கியுள்ளன.
மத்திய கிழக்குப் போர் தொடங்கியது முதல் அங்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.
இப்படியே சென்றால் தாக்குப்பிடிப்பது கடினம் என்று புரிந்துகொண்ட ஹோட்டல்கள் பல சலுகைகளை அறிவிக்கின்றன.
துபாயின் அடையாளங்களில் ஒன்றான பாம் போன்ற இடங்களில் தங்க மத்திய கிழக்குப் போர் தொடங்குவதற்கு முன் ஆயிரம் ஆயிரமாகக் கொட்டிக்கொடுக்க வேண்டியிருக்கும்.
இன்றோ நிலைமை வேறு.
50 விழுக்காடு வரையிலான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
சுற்றுப்பயணிகளை அதிகம் நம்பியிருக்கும் இடங்களில் ஒன்றான துபாய், ஆண்டுக்கு 19.5 மில்லியன் பயணிகளை உபசரித்து வந்தது.
173 சொகுசு ஹோட்டல்கள் உட்பட மொத்தம் 827 ஹோட்டல்கள் துபாயில் உள்ளன.
ஹோட்டல்கள் எப்போதும் 80 விழுக்காட்டுக்கும் மேல் நிரம்பியிருப்பது வழக்கம்.
இப்போதோ வருகையாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டதால் சில மாடிகள் மூடப்பட்டு கிடக்கின்றன.
பர்ஜ் அல் அரப் போன்ற சில ஹோட்டல்கள் புதுப்பிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளன.
உள்ளூர்வாசிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் நிலைமையை ஓரளவு சமாளிக்க உதவியுள்ளன.
ஆனால் இது நீண்ட காலத் தீர்வல்ல என்கின்றன ஹோட்டல்கள்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments