Ticker

6/recent/ticker-posts

காலை ஒரு கப் போதும்... குடல் ஆரோக்கியம் முதல் நோயெதிர்ப்பு சக்தி வரை மேம்படுத்தும் 12 தேனீர்கள்!


குடல் நலம் | காலை ஒரு கப் மூலிகை தேநீர் குடிப்பதன் மூலம் குடல் நலம், கல்லீரல் செயல்பாடு, நரம்பு மண்டலம் மற்றும் மனநலத்திற்கு கிடைக்கும் பலன்களை இந்த செய்தி தொகுப்பு கூறுகிறது. பல்வேறு மூலிகைகளில் உள்ள பாலிஃபினால்கள், ஆண்டிஆக்சிடண்ட்ஸ், அழற்சி எதிர்ப்பு மற்றும் ப்ரீபயாடிக் பண்புகள் செரிமான நொதிகளை ஊக்குவித்து, நல்ல மைக்ரோபயோம் பாக்டீரியாவை வளர்த்து, உடலில் நீர் சேர்வை மற்றும் உப்பு சத்தை கட்டுப்படுத்த உதவுகின்றன.

1. பெப்பர் மிண்ட் தேனீர்

இந்த டீயை குடிப்பதால் வயிறு குளிர்ச்சியாகும்‌. மேலும் இது Irritable bowel syndrome மை குறைக்கும். இது வயிறு உப்புசத்தைத் தடுக்கிறது‌. இதில் உள்ள மென்தால் எனும் பொருள் செரிமானப் பகுதியை சீராக வைக்கிறது. இந்த டீயை உணவு உண்டபின் குடிப்பது நல்ல பலன்தரும்

2. இஞ்சி தேனீர்

வயிற்றுக்கு மிகவும் நல்லது‌. இதில் உள்ள ஜின்ஜெரால் மற்றும் ஷோகால்கள் உணவை நன்கு செரிக்கும் வகையில் வைக்கின்றன. வாந்தி மயக்கம் உள்ளவர்களுக்கும் சிறந்த தீர்வு. ஃப்ரெஷ் இஞ்சி மிகவும் நல்லது‌. இஞ்சித் துண்டுகளை பத்து நிமிடம் கொதிக்கவைத்து சிறிது தேன் சேர்த்து அருந்தலாம்.

3. சாமோமைல் தேனீர்

சென்சிடிவ் வயிறு உள்ளவர்களுக்கு ஏற்றது‌. இதில் உள்ள அபிஜெனின் என்ற பொருள் மூளையின் நரம்புகளை வலுவாக்கி, செரிமானத்தை சீராக்கி, அழற்சியைக் குறைக்கிறது‌. மேலும் இது நரம்பு மண்டலத்தை அமைதிபடுத்துகிறது‌. சாமோமைல் பூக்களை 5 நிமிடம் கொதிக்கவைத்து இரவு படுக்கப் போகுமுன் உட்கொள்ளலாம்.

4. சோம்பு தேனீர்

ஐரோப்பாவில் அதிகம் இதை பயன்படுத்துகிறார்கள். இதில் அனிதோல் என்ற பொருள் ஒருவித வாடையைத் தருகிறது. இது வயிற்றின் வாயுவை தடுக்கக் கூடியது. ஒரு டீஸ்பூன் சோம்பை நன்கு நசுக்கி தேனீர் தயாரித்து, உணவு உண்ட பிறகு உட்கொள்ள, வயிறு வீக்கம் உப்புசதைத் தடுக்கும்.

5. க்ரீன் டீ (தேனீர்)

இது செரிமானத்தை சீராக்கும். இதில் உள்ள பாலிஃபினால்கள் சிறந்த ப்ரீபயாடிக்காகச் செயல்பட்டு தீமையான பாக்டீரியாவை அழிக்கும்‌. இதில் உள்ள எல் தியனைன் சோர்வை நீக்கும். உணவு உண்பதற்கு முன்னால் உட்கொள்வது நல்லது‌.

6. அதிமதுரம் தேனீர்

அதிமதுரத்தில் உள்ள க்ளைசைரிசினன் என்ற பொருள் அழற்சியைக் குறைக்கும். வயிற்று வாயு வயிறுப் பொருமல் போன்றவற்றை கட்டுப்படுத்தும். இதிலேயே இனிப்புச் சுவை உள்ளதால் சீனி சேர்க்க அவசியமில்லை. வேர்களை நன்கு காயவைத்து தேனீர் தயாரிப்பது நல்லது.

7. டேன்டேலியன் தேனீர்

இது கல்லீரலுக்கு மிக நல்லது. பைலை சுரக்க வைக்கும். இது கசப்புச் சுவையாக இருக்கும். செரிமான நொதிகளை ஊக்குவிக்கக் கூடியது. உணவு உண்பதற்கு முன் இதை அருந்துவதால் செரிமானம் சீராக இருக்கும். இதன் டையூரிக் பண்பால் உப்பு சத்தைத் குறைக்கும்‌ உடலில் நீர் சேர்வதை தடுக்கும்.

8. துளசி தேனீர்

சோர்வை நீக்கி செரிமானத்தை சீராக்கும். அழற்சி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.

9. லெமன் இலை தேனீர்

மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை போக்கக் கூடியது‌. நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும். எலுமிச்சை இலைகளை கொதிக்கவைத்து வடிகட்டி குடிக்கலாம். இதன் வாசனை அரோமாதிராபியிலும் பயன்படுகிறது‌.

10. கொத்தமல்லி விதை தேனீர்

இதில் ஆக்சிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்தி வாயு மற்றும் வீக்கங்களைத் தடுக்கிறது. ஒரு டேபிள்ஸ்பூன் விதைகளை கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்‌.

11. மஞ்சள் தேனீர்

இதில் ஆண்டிஆக்சிடண்ட்ஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு உள்ளதால் வயிறு உப்புசம் மற்றும் அழற்சியை தடுக்கிறது. இதோடு சிறிது கருப்பு உப்பு சேர்ப்பதால் மஞ்சளில் உள்ள குர்குமின் உடலில் உறிஞ்சப்படும். இது குடலின் நல்ல மைக்ரோபயோம் பாக்டீரியாவை ஊக்குவிக்கும்.

12. சீரகத் தேனீர்

இந்திய உணவுகளில் முக்கியமான இடத்தை இது பெறுகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் வயிறை குளிர் வைத்து வயிறு வீக்கம் வாயு மற்றும் உப்பு சத்தைத் தடுக்கிறது.

kalkionline


 


Post a Comment

0 Comments