Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-45


குறள் 221:

வறியார்க்கொள் றீவதே ஈகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து.

வறியோர்க்(கு) ஈதலே ஈகையாம்! இன்றிப் பிறர்க்களித்தல் தன்னல மே.

குறள் 222:

நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று.

பிறரிடம் வாங்குதல் நன்றல்ல! ஆனால் பிறர்க்கோ ஈதல் சிறப்பு.

குறள் 223:

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள.

தனது வறுமையைக் காட்டாமல் ஈதல் மனங்கொள்தல் என்றும் சிறப்பு.

குறன் 224:

இன்னா திரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணு மளவு.

இல்லையென்று வந்துநிற்போர் இன்முகம் காணுமட்டும் தொல்லைதான் ஈவார்க்கு! செப்பு.

குறள் 225:

ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவா ராற்றலிற் பின்.

வண்பசி தாங்குகின்ற நோன்பினைக் காட்டிலும் ஏழைக் குணவளித்தல் மேல்.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments