Ticker

6/recent/ticker-posts

இன்னா நாற்பது - 3


கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;
நெடுநீர் புணை இன்றி நீந்துதல் இன்னா;
கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,
தடுமாறி வாழ்தல் உயிர்க்கு. 

விளக்கம்: 

கொடுங்கோல் அரசன் ஆட்சியின் கீழ் வாழ்வது துன்பமாகும். 
தெப்பம் இல்லாமல் ஆற்றினை நீந்திக் கடக்க முயற்சிப்பது துன்பமாகும். 
கடுஞ் சொல் பேசுபவர்களுடனான தொடர்பு துன்பமாகும். 
தடுமாற்ற மனதுடன் உயிர் வாழ்வது துன்பமாகும். 

இன்னா நாற்பது - 4.

எருதி லுழவர்க்குப் போகீர மின்னா
கருவிகண் மாறிப் புறங்கொடுத்த லின்னா
திருவுடை யாரைச் செறலின்னா வின்னா
பெருவலியார்க் கின்னா செயல். 

விளக்கம்: 

ஏர்கள் இல்லாத போது, வயலின் ஈரப் பதம் உழவர் மனதிற்கு  துன்பமாகும்.
போர்க் கருவிகள் இல்லாததால், திரும்பிப் பார்க்காமல் ஓட வேண்டிய நிலை வீரனுக்கு துன்பமாகும். 
பண வசதி உள்ளவர்களப் பகைத்துக் கொள்வது துன்பமாகும். 
வலிமை யுள்ளவர்களுக்கு கெடுதல் செய்வது துன்பமாகும். 

(தொடரும்)

 


Post a Comment

0 Comments