Ticker

6/recent/ticker-posts

துளிர்ந்திருக்கின்றதே!


தெற்கத்துக் காற்றாக 
சுவைத்திடும் கனியாக 
கிழக்குக் கதிரவனாக
விழித்திருக்கேன் மச்சான்

எனது எண்ணமெல்லாம்
திண்ணையிலே இருக்க
படகைக்  கடத்திடும் 
வாடைக் காற்றாக
ஆசை மட்டும் ஏனோ 
எனதுள்ளம் கடத்தி 
உனதுள்ளத்திலே 
கிடத்தி விட்டதே மச்சான் 

நெஞ்சத்திலே 
பட்டா போட்டுக்க 
அடம் பிடித்த காதல் 
கிட்டக் கிட்ட வரும் போது 
கரடு முரடான பாதைக்கு 
மாறிய கோலமென்ன- மச்சான்

பல்லுக் கொட்டிய நம் பாட்டி
கூறிய அறிவுரையெல்லாம்
மாயமானதோ ? மச்சான்

கல்லால் அடித்த மாங்காய் 
விழுந்த இடத்திலே
நெல் முளையிட்டது 
போல் உன் கடும் 
சொல் விழுந்த இதயத்தில் 
இன்றும்  காதல் உயிர்த்து 
துளிர்த்திருக்கின்றதே மச்சான்

ஆர்.எஸ்.கலா 

 


Post a Comment

0 Comments