
பொறையுடைமை
குறள் மொழி 84
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை.
குறள் எண் : 153
குறள் மொழியின் பொருள் :
வறுமையுள் வறுமை என்பது, விருந்தினரை வரவேற்று உபசரிக்காததே ஆகும். அதே போல் அறிவின்மையால் நமக்குத் தீமை செய்பவரை, தீமை செய்தாரைப் பொறுத்துக் கொள்வதே வலிமையிலும் வலிமையானது.
நபிமொழி
இறைநம்பிக்கை கொண்டோரே! பொறுமையை மேற்கொள்ளுங்கள்! பொறுமை கொள்வதில் எதிரிகளை மிகைத்து விடுங்கள் உறுதியுடன் இருங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் வெற்றி அடைவீர்கள்.
-அண்ணல் நபிமொழி,
-சான்று இறைவசனம் : திருக் குர்ஆன் 3:200
இரவச்சம்
குறள் மொழி 85
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும் வன்மையின் வன்பாட்டது இல்.
குறள் எண்: 1063
குறள் மொழியின் பொருள் :
வறுமையினால் ஏற்படும் துன்பத்தை வாழ்நாள் முழுவதும் பிச்சை எடுத்தே நீக்கிக் கொள்ளலாம் என்று நினைத்து, முயற்சியையும், உழைப்பையும் கைவிடுபவனின் எண்ணத்தைப் போல் கொடுமையானது வேறெதுவும் இல்லை.
நபிமொழி
உழைப்பே உயர்வு!
உங்களில் ஒருவர் தம் கயிற்றை எடுத்துக் கொண்டு விறகு வெட்டி, அதைத் தம்முதுகில் சுமந்து சம்பாதிப்பது; ஒருவரிடம் வந்து யாசிப்பதை விடச் சிறந்ததாகும்.
-நபிகள் நாயகம், ஆதாரம் புகாரி : முஸ்லிம்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments