Ticker

6/recent/ticker-posts

கலா சமையல்


முருங்கைப் பூ 
அல்லது குறிஞ்சாப் பூ 
செய்யும் முறை 

தேவையானவை 

காய்ந்த காளான்.  12 .முழுமையானவை இதனை 
நன்றாக அவித்து சிறு துண்டாக நறுக்கி எடுக்கவும். 

பூவு மொட்டு அனைத்தையும்  தண்டு நீக்கி உதிரியாக எடுக்கவும்.

பூண்டு இஞ்சி மாத்திரம் தேவைக்கு ஏற்ப சிறு சிறு 
துண்டாக நறுக்கி எடுக்கவும். 

பழுத்த ஊசி மிளகாய்
உங்கள் காரத்துக்கு 
ஏற்ப எடுக்கவும் பொடியாக
நறுக்கிக் கொள்ளவும். 

தேவைக்கு ஏற்ப உப்பு
எலுமிச்சம்  சார்.
ஓலிவ் எண்ணெய்.
செய்முறை

எண்ணை சூடானதும் நறுக்கிய இஞ்சி பூண்டு
மிளகாய்  சேர்த்து நன்றாகவதக்கவும் .
அவை வதங்கியதும் காளானைச் சேர்த்துக் கிளறவும் 
அப்போதே சிப்பி சோஸ் இருந்தால் ஒரு தேக்கரண்டி விட்டுக் கிளறவும்.

நன்றாக நீர் வற்றியதும் அடுப்பை அடைத்து விட்டு பூவையும் உப்பையும் சேர்த்துக் கிளறி மூடி வைக்கவும் .

10 நிமிடம் கழித்து வேறு பாத்திரத்தில் மாற்றவும் சுவையான பூ வறுவல். தயார்


 


Post a Comment

0 Comments