
கோவையில் திருக்குறள் ஆய்வுக்கழகப் பொன்விழாவில், பாண்டிச்சேரி, உலகசாதனையாளர் பேரவை SE.VE.Record Holder Forum சார்பாக,கோவை தமிழறிஞர் குறளாசான் மு.க.அன்வர்பாட்சா அவர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
கோவை இரத்தினம் குளோபல் பல்கலைக் கழகத்தில்(05-07-2026) நடைபெற்ற திருக்குறள் ஆய்வுக் கழகத்தின் பொன்விழாவில்,குவைத் நாட்டின் தொழிலதிபர் டாக்டர் எஸ்.எம்.ஹைதர்அலி அவர்களின் தலைமையில், வேளாண்பல்கலைக் கழக மேனாள் இயக்குநர் பேராசிரியர் முனைவர் ஆர்.விஜயராகவன் ஐயா முன்னிலையில் 50 ஆண்டுகாலத் திருக்குறள் பணி, தமிழ்ச்சேவை என அயராது இலக்கியச் சேவையாற்றிய தமிழ்ச் செம்மல் மற்றும் தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருதாளர் திரு மு.க.அன்வர் பாட்சா அவர்களுக்கு ஆல் இந்தியா வேர்ல்ட் ரெக்கார்ட் யூனிவர்சிட்டி *மதிப்புறு முனைவர் விருது வழங்கி சிறப்பித்து கௌரவித்தது.

மேலும் உலக சாதனையாளர் திரு வெங்கடேசன், நல்லாசிரியர் திரு.லிங்கன், மதிப்புறு முனைவர் அஞ்சல் தஞ்சைதாசன், RGU பண்பலை இயக்குநர் முனைவர் மகேந்திரன் மற்றும் திருக்குறள் ஆய்வுக் கழக ஆளுமைகள் இணைந்து வழங்கினர்.
வேட்டை கோவை நிருபர்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




2 Comments
அருமையான பதிவு...மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய வாழ்த்து
ReplyDeleteகள்