
ஜெர்மனி அரசாங்கம் மருத்துவ விடுப்புக்கான கெடுபிடியை அதிகரிக்கிறது.
இனி ஒருநாள் என்றாலும் மருத்துவ ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஜெர்மனியில் தற்போது மூன்று நாள் அல்லது அதற்கு மேல் வேலைக்குச் செல்லாவிட்டால் மட்டுமே மருத்துவக் காரணத்தைக் காட்ட வேண்டும்.
கோவிட்19 காலத்தில் தொலைபேசி மூலமாகவே மருத்துவ விடுப்புச் சான்றிதழ் பெறலாம் என்ற விதிமுறை இருந்தது.
அரசாங்கம் இப்போது அதையும் ரத்துச் செய்கிறது.
பொருளாதார வளர்ச்சியைத் தூண்ட ஜெர்மனி புதிய சீர்திருத்தத்தை அறிமுகம் செய்கிறது. மருத்துவ விடுப்பு விவகாரமும் அதில் சிக்குகிறது.
ஜெர்மானியப் பிரதமர் ஃபிரைட்ரிச் மெர்ஸ் (Friedrich Merz) ஜெர்மனி சமூகத்தில் மருத்துவ விடுப்பு அளவுக்கு அதிகம் என்று தொடர்ந்து குறைகூறி வந்தார்.
இதற்கிடையே வேலையிலிருந்து ஓய்வுபெறும் வயதை படிப்படியாக 65 வயதிலிருந்து 67 வயதிற்கு உயர்த்துகிறது ஜெர்மனி.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments