
மலேசியாவில் பெண் ஒருவர் தைரியமாகப் பாம்பைப் பிடித்த சம்பவத்தின் காணொளி இணையத்தில் பரவுகிறது.
பாம்பைப் பார்த்துப் பலர் பரபரப்பு அடைந்தபோது அந்தப் பெண் மட்டும் நிதானமாகப் பாம்பைக் கையால் பிடித்தார்.
காணொளியில் கார் நிறுத்தப்பட்ட இடத்தில் மழை நீர் தேங்கிக் கிடப்பதும் அங்கு பாம்பு நகர்ந்துகொண்டிருப்பதும் தெரிந்தது.
சுற்றியிருந்த மற்றவர்கள் பயத்தில் அங்கிருந்து ஓடுவது தெரிந்தது.
ஆனால் பெண் மட்டும் தைரியமாகப் பாம்பை நெருங்கினார்.
வாலைக் கையால் பிடித்தார்.
வேறொருவர் துடைப்பத்துடன் உதவ முன்வந்தார். ஆனால் அவரும் பாம்பைக் கண்டு தலைதெறிக்க ஓடினார்.
காணொளியைப் பதிவிட்டவர், பாம்புக்குதான் உதவி தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டார்.
ஆபத்தான சூழ்நிலையில் பலர் பயப்படும்போது பெண் மட்டும் தைரியத்துடன் நடந்துகொண்டதை இணையவாசிகள் புகழ்ந்தனர்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments