Ticker

6/recent/ticker-posts

கன்னிக் காதல்!


முதல் பயணம் முதல் சந்திப்பு 
முதல் காதல் முதல் முத்தம் 
முதுமை வரை நினைத்திடும்.
முக்கிய நிகழ்வுகள் அவை .

கலங்கித் தான் பிரிந்தாலு
கன்னியத்தோடு முறிவுற்றாலும்.
கடமை உடமை வேற்றுமையானாலும் 
கவலையோ கனவோ கொடுத்தபடியே"
 ஓரமாய் நிலைத்திருக்கும்.

பலருக்கு  இளமைக் காதல் 
பழமாய்ப் போய் விடும் 
பற்பலருக்கு காயிலே கருகிடும்.
படிந்திருப்பது சுவடுகள்  மட்டும்.

சிலர் மறந்தது போல் நடிப்பர் 
சிற்சில தண்டனையென ஏற்பர் 
சிரித்த காலத்தை மறந்திருப்பர் 
சிந்தனையிலே மூழ்கிப்போவர்.

உதறிட முடியாத எண்ணத்தை 
உள்ளத்திலே சுமந்து கொண்டு 
உறவுக்காக மணவாழ்க்கையில் 
உள்ளே சிறையாகிக் கிடப்பர்.

இதயம் பலமானாலும் அது
இடியத் தாங்கிடும் பிரிவையல்ல 
இவை பலரது வாழ்விலும் 
இவை பலரின் வாழ்விலும்
இறங்கி நிற்கும் உண்மையதே.

கன்னிக் காதல் கன்னியாகவே 
கண்ணீரோடு வாழ்ந்திடுமே 
கணப்பொழுதும் ஞாபகமிடுமே"
கனவிலும் வந்து தாளமிடுமே.

ஆர் எஸ் கலா


 


Post a Comment

0 Comments