Ticker

6/recent/ticker-posts

முன்னாள் எம்.பி சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை!


சட்டவிரோதமாக வழிமறித்தல், தாக்குதல் நடத்தி காயப்படுத்துதல், இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து காயப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, அவரது சாரதி மற்றும் அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவின் (MSD) பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராகப் பதுளை மேல் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில், தண்டனை விவரங்கள் இன்று (28) அறிவிக்கப்படவுள்ளன.

இவ்வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் அவரது சாரதியான பண்டார ரத்நாயக்க ஆகியோர் 4 குற்றச்சாட்டுகளுக்கும், அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் அதிகாரியான ரசிக கருணாதிலக்க 3 குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளிகளாக நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டனர்.

எனினும், இரண்டாம் எதிரியான சாரதி பண்டார ரத்நாயக்க ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தின் பின்னணி: கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளன்றோ பண்டாரவளை நகர வட்டரங்கிற்கு அருகில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி உள்ளிட்ட குழுவினர் ஜீப் வண்டிகளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர்களது ஜீப் வண்டியை பொலிஸ் ஜீப் வண்டி ஒன்று முந்திச் சென்றமை தொடர்பில் ஏற்பட்ட தகராறே இச்சம்பவத்திற்குக் காரணம் என வழக்கு விசாரணையில் தெரியவந்தது.

தம்மை முந்திச் சென்ற பொலிஸ் ஜீப் வண்டியை வழிமறித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர், அதில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தி காயப்படுத்தியதாக முறைப்பாட்டாளர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

itnnews


 


Post a Comment

0 Comments