
ஒரு நாளுக்கு 5 முறை புதிய காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடுவதால் மட்டும் இதய ஆரோக்கியத்துக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைத்துவிடாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எல்லா உணவிலும் தேவையானது இருப்பதில்லை;
Flavanols என்றழைக்கப்படும் முக்கிய ஊட்டச்சத்து கிடைக்காமல் போகலாம் என்று ஆய்வு சொல்கிறது.
புளூபெரி, பிளம், பிளாக்பெரி, அவரைக்காய், செரி ஆகியவற்றை உண்டு கிரீன் டீ குடித்தால் அவற்றில் உள்ள ஊட்டச்சத்து உடலுக்குச் சென்று சேரும்.
அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உள்ள 30,000 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
அன்றாடம் ஐந்து பங்கு பழமும் காய்கறியும் சாப்பிடுவோரிடம் கூட இதய ஆரோக்கியத்துக்கு முக்கியமான ஊட்டச்சத்து இல்லை என்பது கண்டறியப்பட்டது.
Food and Function எனும் புதிய ஆய்வில் ஐவரில் ஒருவருக்கு அன்றாடம் தேவைப்படும் 500 மில்லிகிராம் அளவு Flavanols இல்லாதது தெரியவந்தது.
Antioxidants எனும் அந்த ஊட்டச்சத்து குறிப்பிட்ட சில உணவில் மட்டுமே உள்ளது.
இதயத்துக்குச் செல்லும் ரத்தவோட்டம், ரத்த நாளங்களின் மீட்சி, வீக்கத்தைக் குறைக்கும் தன்மை ஆகியவற்றுக்கு அது துணைபுரியும்.
ஒவ்வொரு நாளும் உணவுப் பழக்கத்தில் சிறு மாற்றங்களைச் செய்தால் இதய ஆரோக்கியத்தைப் பேணி காக்கலாம் என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
seithi.mediacorp

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments