Ticker

6/recent/ticker-posts

வெனிசுலாவில் ரத்த சிவப்பாக மாறிய வானம்.. மக்கள் பீதி.. காரணம் என்ன?


நிலநடுக்கங்களால் பேரழிவை சந்தித்த வெனிசுலாவின் கராகஸ் நகரில் வானம் திடீரென ரத்தச் சிவப்பாக மாறியது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அடுத்தடுத்து ஏற்பட்ட 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் தலைநகர் கராகஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள் நிலைகுலைந்து போயுள்ளன.

இந்த நிலையில், கராகஸ் நகரில் சூரியன் மறையும் நேரத்தில் ஒட்டுமொத்த வானமும் அடர் ரத்தச் சிவப்பாக மாறியது அங்கிருந்த மக்களை அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தியது.

இந்த விசித்திரமான காட்சி, நிலநடுக்கப் பேரழிவோடு தொடர்புடையதோ என்ற அச்சமும் வதந்திகளும் மக்கள் மத்தியில் எழுந்தன.

ஆனால், இதற்குப் பின்னால் எந்தவிதமான ஆபத்தோ, மர்மமோ இல்லை என்றும், இது ஒரு இயற்கை நிகழ்வுதான் என்றும் வளிமண்டல விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.

news18


 


Post a Comment

0 Comments