Ticker

6/recent/ticker-posts

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் குறித்து விசேட விசாரணை ஆரம்பம்!


முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக, மேல் மாகாண தெற்கு திசைக்கு பொறுப்பான விசேட விசாரணைப் பிரிவிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பொலிஸ்மா அதிபர் சிரேஷ்ட சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் நேரடி உத்தரவின் பேரில் இந்த விசாரணைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, அரச இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கை, மரண பரிசோதனை அறிக்கை மற்றும் சம்பவ இடத்திலான தடயவியல் சோதனைகள் மூலம் மேலதிக தகவல்களை வெளிக்கொணர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பொலிஸ்மா அதிபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ள நிலையில், இது தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்பது தொடர்பில் குறித்த விசேட விசாரணைகளின் மூலம் கண்டறியப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

lankatruth


 


Post a Comment

0 Comments