Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் இத்தனை பேருக்கு சர்க்கரை நோயா? அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்!


தமிழ்நாட்டில், 4 பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த ரிப்போர்ட் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.

NIE எனப்படும் National Institute of Epidemiology (தேசிய தொற்றுநோயியல் நிறுவனம்) சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியிருக்கிறது. இந்த ஆய்வுகளின்படி, தமிழ் மக்கள் தொகையில், 23 சதவீதம் பேர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சிகர டேட்டாவை முன் வைத்திருக்கிறது.

NIE கொடுத்திருக்கும் இந்த ஆய்வை பார்த்தால், தமிழ்நாட்டில் மட்டும் நான்கு பேரில் ஒருவருக்கு கட்டாயம் டயாபிட்டீஸ் இருக்கும் என்பது தெரிய வருகிறது. 2020ல், இந்த நிறுவனம், ஆய்வு ஒன்றை நடத்தியிருக்கிறது. இதில், 18 சதவீதமாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை இருந்துள்ளது. ஆனால் இதுவே 2024ஆம் ஆண்டின் ஆய்வில் சுமார் 23 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளில், 5 சதவீதம் பேர், இதனால் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 

2028ஆம் ஆண்டில், இதே போன்று ஆய்வு நடத்தப்பட்டால், இந்த சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை, இன்னும் அதிகரிக்குமோ என்கிற அச்சமும் எழுந்துள்ளது. அதே சமயத்தில் இதற்கு பின்னால் இருக்கும் காரணிகளையும் நாம் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. 

வயதானவர்களுக்கு என்று மட்டும் அல்லாமல், பிறக்கும் குழந்தைகளுக்கு கூட நீரிழிவு நோய் ஏற்படுகிறது. அதாவது, குழந்தை பிறக்கும் போது, பிரசவ கால நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இது ஏற்பட காரணம், இந்த காலத்தில் இருக்கும் உணவு பழக்கம், உடற்பயிர்சியின்மை, வாழ்வியல் மாற்றம் உள்ளிட்டவையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

சைலண்ட் கில்லர்:

ரத்த அழுத்தம் எப்படி சைலண்ட் கில்லரோ, அதே போல நீரிழிவு நோயும் சைலண்ட் கில்லர்தான் என சொல்லப்படுகிறது. அதாவது, இந்த நோய் மரபு வழியில் பரவும் நோய் என்று சொல்லப்படுகிறது. 

எனவே, உங்களுக்கு முன்னாள் இருக்கும் தலைமுறையில் யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்திருந்தால் 3 மாதங்களுக்கு ஒருமுறையேனும் சோதனை செய்து கொள்வது சிறந்தது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எப்படி சோதனை செய்வது?

சர்க்கரை நோய் சோதனையை எடுக்கும் போது, வெறும் வயிற்றில் எடுக்க வேண்டும். பின்பு சாப்பிட்டு முடித்து 2 மணி நேரம் கழித்து எடுக்க வேண்டும்.

இதில் வெறும் வயிற்றில் எடுக்கும் போது 90ம், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து டெஸ்ட் எடுக்கும் போது 120ம் இருக்க வேண்டும். இதில் கர்ப்பிணி என்றால், அவருக்கு 140 வரை இருக்கலாம். 

சாதாசரணமாக, 130 முதல் 140 வரை இருந்தால், சர்க்கரை நோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். 

கட்டுப்படுத்துவது எப்படி?

சர்க்கரை நோயை, உணவு கட்டுப்பாடு, நடைப்பயிற்சி உள்ளிட்டவைகளை செய்து அவை வராமல் தடுக்கலாம். அதையும், ஒரே நாளில் இதை செய்து விட முடியாது. இரவு உணவு என்ன சாப்பிட்டோம் என்பதை பொருத்தும், அடுத்த நாள் சர்க்கரை நோயில் மாற்றம் இருக்கலாம்.

அடிப்பட்டால் புண்கள் ஆறாமல் இருத்தல், தலைசுற்றல் உள்ளிட்டவை கூட நீரிழிவு நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். அதே சமயத்தில் அவை உடலில் இருக்கும் இன்சுலின் குறைபாடாகவும் இருக்கலாம். எனவே, என்னவாக இருப்பினும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. 

சர்க்கரை நோய் இருந்தால், அறுவை சிகிச்சை சிரமம். இதனால், அதை வராமல் பார்த்துக்கொள்வதும், வந்தால் அதை கட்டுக்குள் வைப்பதும் உங்கள் கையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

zeenews


 


Post a Comment

0 Comments