Ticker

6/recent/ticker-posts

பயங்கர வலையமைப்பின் பின்னணி பின்னணி…


இலங்கையில் இயங்கி வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் சர்வதேச ரீதியில் எவ்வாறான பலமான தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளன என்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரியவந்துள்ளதுடன், இலங்கை பாதுகாப்புப் படையினர் அவர்களைப் பின்தொடர்ந்து கைது செய்யும் நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தியுள்ளனர்.

நேற்று (25) இந்தியாவில் கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகள் தொடர்பில் அவதானம் செலுத்தும் அவதானிகள், கூலிப் கொலையாளிகளுக்கு செலவிடப்படும் பணத்திற்கு மேலதிகமாக அவர்களின் செயற்பாடுகளுக்காக எவ்வளவு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும், அவர்களின் பின்னணி பாதுகாப்பிற்காக சர்வதேச ரீதியில் ஒரு வலையமைப்பு இயங்கி வருகின்றது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கைக்குள் துப்பாக்கிகளை வழங்குதல், மோட்டார் சைக்கிள்களை வழங்குதல், நவீன கார்களை வழங்குதல், தேவைப்பட்டால் நாட்டில் இருந்து தப்பிச் செல்வதற்கான வசதிகளை செய்து கொடுத்தல் மற்றும் வெளிநாடுகளில் புகலிடம் அளித்தல் போன்ற பரந்த அளவிலான தொடர்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த காலம் முழுவதும் அரசியல் அனுசரணையுடன் இயங்கி வந்த இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை அடக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் இராஜதந்திர புரிதலுடன் செயற்பட்டு வருகின்றது.

lankatruth


 


Post a Comment

0 Comments