
அமெரிக்காவில் தங்கி படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும் என ட்ரம்ப் யோசித்து வருவதாக வெளியாகியிருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.
அமெரிக்காவில் தங்கி, எப்படியாவது படிக்க வேண்டும் என்பது, பல ஆயிரம் இந்திய மாணவர்களின் கணவாக இருக்கிறது. ஆனால், இது குறித்து ட்ரம்ப் ஒரு திடுக்கிடும் அறிவிப்பை வெளியிடப்போவதாக பரவி வரும் தகவல், அனைவரையும் கவலையடைய செய்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அதில் இன்னொன்று தற்போது புதிதாக சேர்ந்துள்ளது. அமெரிக்காவில் வந்து தங்கி படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், படிப்பு முடிந்ததற்கு பிறகு அங்கேயே தங்கி வேலை செய்ய ட்ரம்ப் முட்டுக்கட்டை போட இருப்பதாக கூறப்படுகிறது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியாகியிருக்கும் ஒரு செய்தியின் படி, அமெரிக்காவின் உயர் அரசு அதிகாரிகள், OPT-Optional Practical Training எனப்படும் work permitக்கு (வேலை அனுமதி) ஒரு பெரிய விலையை நிர்ணயிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து வெள்ளை மாளிகையிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இப்போதைக்கு, OPT எனப்படும் வேலைக்கான அனுமதி கிடைத்தால், அமெரிக்காவில் தங்கி படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களின் பட்டப்படிப்பை முடித்த பிறகு ஒரு வருடம் வேலைக்கான விசாவை வாங்காமல் வேலை பார்க்கலாம். அதிலும், STEM மாணவர்கள் என சொல்லப்படும், அறிவியல், தொழில்நுட்பம், என்ஜினியரிங், கணிதம் உள்ளிட்ட துறைகளில் இருக்கும் மாணவர்களுக்கு கூடுதலாக இரண்டு வருடம் வழங்கப்படும். உதாரணத்திற்கு கணினி அறிவியல் படித்த ஒரு மாணவர், அமெரிக்காவில் வேலைக்கான விசாவை வாங்காமல், 3 வருடங்கள் OPT மட்டும் வைத்துக்கொண்டு வேலை பார்க்க முடியும்.
இது, அமெரிக்காவில் ஒரு நல்ல வேலையை அமைத்துக்கொள்ளவும், தங்கள் தொழில் வாழ்க்கையில் மாணவர்கள் முன்னேறவும் வழி வகுக்கும். இதை வைத்து, அவர்கள் H1B விசாவையும் வாங்க முடியும். இந்த விசா, அமெரிக்காவில் இருக்கும் திறமையான வெளிநாட்டு வல்லுநர்களுக்கு வழங்கப்படும் விசாவாகும்.
ஆனால், இப்போது தீட்டப்படும் திட்டமே வேறு. அமெரிக்காவில் தங்கி படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் அங்கேயே தங்கி வேலை பார்க்க வேண்டும் என்றால், அதற்கான கட்டணம் 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக (இந்திய ரூபாய் மதிப்பில் 95 லட்சம்) இருக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், இதை பெரும்பாலான குடும்பங்களால் கட்ட முடியாது. OPTஐ வைத்து பல பேர் விசா வாங்க தவறுதலாக கையாள்வதால் இந்த முடிவு எடுக்கப்படுவதாக அதிகரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதை விமர்சிப்பவர்களோ, இது சரியான திறன் மிக்கவர்களை தவற விடும் போக்கு என்கின்றனர்.
ஏன் இது இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு?
அமெரிக்காவிற்கு தங்கள் நாட்டு மாணவர்களை படிக்க அனுப்பும் நாடுகளின் லிஸ்டில் இந்தியாதான் பெரிய இடத்தை பிடித்திருக்கிறது. இங்கு 2024-25 ஆண்டில் மட்டும் 3.63 லட்சம் மாணவர்கள் அமெரிக்காவில் படிக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஒரு த் அரவு சொல்கிறது.
OPTதான், இந்தியர்கள் அமெரிக்காவை படிப்பதற்காக தேர்ந்தெடுக்க முழுமுதற் காரணமாக இருக்கிறது. இப்படி அமெரிக்காவில் தங்கி படிக்கும் பலர், இந்தியாவில் படிப்பிற்காக வங்கி கடன் வாங்கி, அங்கு வேலை பார்த்து கடன் அடைக்கலாம் என திட்டமிடுகின்றனர். ஆனால், தற்போதைய 1 லட்ச டாலர் முறை அமல்படுத்தப்பட்டால், மாணவர்கள் இன்னும் அதிக கடன் வாங்க வேண்டியதாக இருக்கும், இதை பலரால் வாங்கவே முடியாமல் போகும்.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments