
அபகரிக்கப்பட்ட வக்பு சொத்துக்கள் சம்பந்தமாக பரப்பரப்பான தகவல்களை வெளியிட்டு வரும் பேருவளை ஹில்மி அவர்களுக்கு உயிரச்சுறுத்தல்
விடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வரருகின்றது.
அண்மையில் இவர் வெளியிட்ட ஒரு வக்பு சொத்து சம்பந்தமாக பரபரப்பான தகவலை அடுத்து இவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெஹிவளை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று பதிவாகியுள்ளது.
கடந்த 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு வரும் போது அவர் வழமையாக தொழுகைக்கு வரும் தெஹிவளை மெரீன் வீதியில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகில் வைத்து இவர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடபட்டிருந்தாக அவசர அவருக்கு தகவல் கிடைத்துள்ளது. கிடைத்த தகவலை அடுத்து இவர் அங்கு செல்வதை தவிர்த்து உள்ளார். இதனால் இத்தாக்குதல் முயற்சி தவிர்க்கப்பட்டது.
மேலும் இப்பள்ளி வாசலை கட்டி முடிக்க, பல வருடங்களாக அல்லாஹ்வின் மாளிகை என்ற நிலைப்பாட்டில் இலவசமாக வேலை செய்த பொறியியலாளர் ஒருவர், பள்ளிவாசலை அபகரித்த அபகரிப்பாளர்களிடம், தான் அல்லாஹ்வுக்காக சிந்திய வியர்வையையும், அல்லாஹ்வுக்காக வக்கூப் செய்த தனது வாழ்நாளின் காலத்தையும் பற்றி வினவிய போது, இஷா தொழுகைக்காக இவர் வந்த வேலையில் பள்ளிவாசலின் உள்ளே வைத்து குறிப்பிட்ட பொறியாளர் கடுமையாக தாக்கப்பட்டதாக அறிய கிடைக்கின்றது.
இத்தாக்குதலை தெஹிவளை, கல்கிசை பள்ளிவாசல் சம்மானத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவரும் இணைந்து மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். தாக்குதல் திட்டத்தில் இவருக்கு எதிராகவும் தற்போது புகார் செய்யப்பட்டுள்ளது.
வேட்டை நிருபர்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments