Ticker

6/recent/ticker-posts

ரொனால்டோவின் கேரளா பாணி திருமணம் இணையத்தில் வைரல்


கால்பந்து சூப்பர் ஸ்டார் கிறியானோ ரொனால்டோ போர்த்துக்கலில் தனது நீண்டநாள் காதலியான ஜோர்ஜினா ரோட்ரிகஸை அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்டதைத் தொடர்ந்து, அவர் கேரளா பாணியில் ஆடம்பரமாகத் திருமணம் செய்துகொள்வது போன்ற கற்பனையான AI காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.

மிகவும் யதார்த்தமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த AI காணொளியில், ரொனால்டோவும் ரோட்ரிகஸும் பாரம்பரிய தென்னிந்திய மணமகன் மற்றும் மணமகளாக வடிக்கப்பட்டுள்ளனர்.

 அவர்கள் வண்ணமயமான அலங்காரங்கள் மற்றும் பிரமாண்டக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் பாரம்பரிய திருமண உடைகளில் தோன்றுவது போலக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், லியோனல் மெஸ்ஸி, நெமார் மற்றும் எம்பாப்பே போன்ற கால்பந்து சூப்பர் ஸ்டார் விண்மீன்களின் AI பதிப்புகளும் பாரம்பரிய இந்திய உடைகளில் இந்தக் கற்பனையான திருமணத்தில் கலந்துகொள்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பிஃபா (FIFA) தலைவர் கியானி இன்ஃபான்டினோவும் இந்த கற்பனையான சடங்கில் விருந்தினராகக் காட்சியளிக்கிறார். மெஸ்ஸி, நெமார், ஹாலந்து மற்றும் எம்பாப்பே ஆகியோரைப் போலவே இவரது தோற்றமும் முற்றிலும் கற்பனையானது என்பதுடன், இது ரொனால்டோவின் உண்மையான திருமணத்தில் அவர் கலந்துகொண்டதைக் குறிக்கவில்லை.

இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பெரும் ஆர்வத்தைத் ஈர்த்துள்ளன. சில பார்வையாளர்கள் ஆரம்பத்தில் இந்தக் காட்சிகளை உண்மையான திருமணக் காட்சி என்று தவறாக நினைத்தனர். இருப்பினும், தென்னிந்தியத் திருமணச் சடங்கும், கால்பந்து நட்சத்திரங்களின் தோற்றமும் முற்றிலும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை ஆகும். எனவே, இவற்றைத் தம்பதியினரின் உண்மையான திருமணத்துடன் குழப்பிக்கொள்ளக் கூடாது.

கிறியானோ ரொனால்டோவும் ஜோர்ஜினா ரோட்ரிகஸும், ஜோடி தங்கள் நிச்சயதார்த்தத்தை அறிவித்த சரியாக ஓராண்டுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை அன்று திருமணம் செய்துகொண்டனர்.

இந்தக் காணொளி சரியான நேரத்தில் வெளியாகியுள்ளது. ரொனால்டோ (41) மற்றும் ரோட்ரிகஸ் (32) ஆகியோர் ஆகஸ்ட் 11ஆம் தேதி போர்த்துக்கலின் கஸ்காய்ஸ் நகரில் ஒரு தனியார் குடிமைத் திருமண விழாவில் (civil ceremony) அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்டனர். தங்களுடைய தங்கத் திருமண மோதிரங்களைக் காட்டும் கைகளின் புகைப்படத்தை ஒரு கூட்டுச் சமூக ஊடகப் பதிவு மூலம் தம்பதியினர் உறுதிப்படுத்தினர்.

இந்த அந்தரங்கமான திருமண விழாவில் அவர்களின் ஐந்து குழந்தைகளும் கலந்துகொண்டனர். ரொனால்டோவும் ரோட்ரிகஸும் தங்கள் நிச்சயதார்த்தத்தை 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் திகதி அறிவித்தனர் — இது அவர்களின் திருமணத்திற்குச் சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு நிகழ்ந்தது. ரோட்ரிகஸ் தனது நிச்சயதார்த்த மோதிரத்தைக் காட்டும் வகையில், ரொனால்டோவின் கையின் மீது தன் கை ஓய்வெடுக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

ரோட்ரிகஸ் மாட்ரிட்டில் உள்ள குச்சி (Gucci) கடை ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தபோது சந்தித்துக்கொண்டதைத் தொடர்ந்து, இந்தத் தம்பதியினர் 2016 முதல் ஒன்றாக இருந்து வந்தனர். பின்னர் அவர்கள் 2017 இல் தங்கள் உறவை வெளிப்படுத்தியதுடன், தொடர்ந்து ஒரு குடும்பமாக வாழத் தொடங்கினர்.

அவர்களின் உண்மையான திருமணம் மிகவும் இரகசியமாக நடத்தப்பட்டதுடன், பொதுவெளியில் குறைந்த அளவிலான விவரங்களே வெளியிடப்பட்டன. இந்த எளிமையான விழா, உலகக் கால்பந்தின் சில பெரிய பெயர்களைக் கொண்டு பிரமாண்டக் கொண்டாட்டமாகச் சித்தரிக்கும் கண்கவர் AI பதிப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

கற்பனையான விருந்தினர் பட்டியல், விரிவான இந்தியத் திருமணச் சூழல் மற்றும் சினிமாத்தனமான காட்சிகள் ஆகியவை இந்தக் காணொளி கால்பந்து ரசிகர்கள் மற்றும் AI-உள்ளடக்க உருவாக்குநர்கள் மத்தியில் ஈர்ப்பைப் பெற உதவியுள்ளன.

இந்தக் காணொளி ரொனால்டோவின் உண்மையான திருமணத்தின் பதிவு என்பதை விட, இறுதியில் டிஜிட்டல் பொழுதுபோக்கு அம்சமாகவே உள்ளது. மேலும், உண்மையான காணவொளிக்கும் புனையப்பட்ட உள்ளடக்கத்திற்கும் இடையிலான கோட்டை மங்கச் செய்யும் வகையில், மேம்பட்ட AI தொழில்நுட்பம் எவ்வாறு உறுதியான பிரபலங்களின் காட்சிகளை உருவாக்க முடியும் என்பதையும் இதன் பிரபலம் எடுத்துக்காட்டுகிறது.

tamilmirror


 


Post a Comment

0 Comments