
அமெரிக்காவில் பெற்ற தாய் மற்றும் தம்பியை கொலை செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணம். பாஸ்டன் நகரில் இருந்து சுமார் 48 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆக்டன். அங்குள்ள மார்த்தா லேன் என்ற இடத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளது. 45 வயதான சுதா வெங்கடேசன். அவரது இளைய மகன் சித்தார்த் அரவிந்த்... மூத்த மகன் அர்ஜுன் அரவிந்த் என ஒரு குடும்பமாக வசித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று காலை, வழக்கம்போல் சுதா வெங்கடேசனை பார்த்துவிட்டு அவரது கணவர் வேலைக்குச் சென்றுள்ளார்.
இளைய மகன் சித்தார்த்தும் மதியம் வரை வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. மாலை நேரம் சுமார் 6.30 மணியளவில் டியூஷன் எடுப்பதற்காக டியூஷன் மாஸ்டர் வீட்டுக்கு வந்துள்ளார். கதவை பல முறை தட்டியும் திறக்கப்படாததால் சந்தேகமடைநத் அவர், குடும்பத்தினரை செல்போன் மூலம் தொடர்புகொள்ள முயன்றார். ஆனால் அவர்கள் போனை எடுக்காததால், சுதாவின் கணவருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அவரும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து வீட்டுக்கு வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் அடித்தளத்தில் சுதா வெங்கடேசனின் உடலும் முதல் தளத்தில் அவரது இளைய மகன் சித்தார்த்தின் உடலும் கிடந்தது. இருவரது உடலிலும் பலத்த காயங்கள் இருந்துள்ளன. ஆனால், அவர்கள் எப்படி கொலை செய்யப்பட்டார்கள்? எந்த ஆயுதம் பயன்படுத்தப்பட்டது? என்பது தொடர்பான மருத்துவ மற்றும் தடயவியல் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே போலீசாரின் கவனம் மூத்த மகன் அர்ஜுன் அரவிந்த் மீது திரும்பியது
காரணம் அர்ஜுனை சம்பவ இடத்தில் காணவில்லை, அவரது தாயின் Honda Accord காரையும் காணவில்லை. இதையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், அர்ஜுனின் புகைப்படம் மற்றும் காரின் விவரங்கள் அனைத்து போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. வேலண்ட் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் காணாமல் போன Honda Accord கார் கண்டுபிடிக்கப்பட்டது. காருக்குள் இருந்தது அர்ஜுன் அரவிந்த்தை, போலீசார் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் கைது செய்தனர்.
தற்போது, அர்ஜுன் மீது இரண்டு கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மற்றொரு அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. கொலை செய்வது தொடர்பாக ChatGPT-யில் அர்ஜூன் தேடல்கள் மேற்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், AI chatbot-ஐ பயன்படுத்தி Gothic novel பாணியிலான கதைகள், கதாபாத்திரங்கள் மற்றும் கற்பனைக் காட்சிகளை உருவாக்குவது தொடர்பாகவும் அர்ஜுன் கேள்விகளை கேட்டிருக்கிறார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெற்ற மகனே தாய் மற்றும் தம்பியை கொலை செய்த இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments