
இன்னா நாற்பது -19.
குலத்துப் பிறந்தவன் கல்லாமை யின்னா
நிலத்திட்ட நல்வித்து நாறாமை யின்னா
நலத்தகையார் நாணாமை யின்னாவாங் கின்னா
கலத்தில் குலமில் வழி.
விளக்கம்:
- பெருமை மிகு குடும்பத்தில் பிறந்த ஒருவன் கல்வி கற்காமல் இருப்பது துன்பமாகும்.
- விளை நிலத்தில் பாவிய வித்துக்கள் முளைக்காமல் போவது துன்பமாகும்.
- அழகிய பெண், நாணம் இல்லாமல் இருப்பது துன்பமாகும்.
- மாறுபட்ட குணமுடைய இரு குடும்பங்கள், தங்களுக்குள் உறவு வைத்துக் கொள்வது துன்பமாகும்.
இன்னா நாற்பது -20.
மாரிநாட் கூவுங் குயிலின் குரலின்னா
வீர மிலாளர் கடுமொழிக் கூற்றின்னா
மாரி வளம்பொய்ப்பி னூர்க்கின்னா வாங்கின்னா
மூரி யெருத்தா லுழவு.
விளக்கம்:
- மழை பெய்யும் நேரத்தில் கூவுகின்ற குயிலின் குரல் துன்பமாகும்.
- அன்பில்லாதவர்கள் கடுமையாகப் பேசுவதைக் கேட்பது துன்பமாகும்.
- பருவ காலத்தில் மழை பெய்யாவிட்டால் ஊருக்குத் துன்பமாகும்.
- எருமையை ஏரில் பூட்டி உழுவது துன்பமாகும்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments