
குறள் 259:
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று.
பொருளிட்டு வேள்வி படைத்தலினும் ஊனை விருப்புடன் உண்ணாமை நன்று.
குறள் 260:
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும்.
கொல்லாமல் வாழ்வோனை ஊனை மறுப்பவனை இவ்வுலகம் சூழ்ந்து தொழும்
தவம்
குறள் 261:
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு
மற்றவர்க்குத் துன்பம் கொடுக்காமல், புண்படுத்தும் மற்றவரைத் தாங்கல் தவம்.
குறள் 262:
தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை அஃதிலார் மேற்கொள் வது.
புலனடக்கம் கொண்டோர் தவக்கோலம் நன்றே! இலாதோர் தவக்கோலம் வீண்.
குறள் 263:
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன் மற்றை யவர்கள் தவம்.
துறவிக் குதவவேண்டும் என்றே தவத்தை மறந்தனரோ மற்றவர்கள் இங்கு?
(தொடரும்)
மதுரை பாபாராஜ்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments