
குறள் 264:
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும் எண்ணின் தவத்தான் வரும்.
வன்பகையை மாற்றவும் நட்பை வளர்க்கவும் என்றும் உதவும் தவம்.
குறள் 265:
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்.
வேண்டுவ தெல்லாம் தவத்தால் கிடைப்பதால் ஏந்துவோம் இல்லறத்தில் தான்.
குறள் 266:
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
தவம்செய்வோர் தன்கடமை செய்வோர்! பிறரோ வலையாசைக் குள்துடிக்கும் மீன்.
குறள் 267:
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு
சுடச்சுட பொன்னொளிரும்/ துன்பத்தைத் தாங்கி நடக்கும் தவமனிக்கும் மாண்பு.
குறள் 268:
தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாந் தொழும்.
தன்னுயிர்,தானென்னும் ஆணவம் இல்லாத பொன்மனத்தைப் போற்றும் உலகு.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments