3. நீத்தார் பெருமை
பற்றற்ற சான்றோர் பெருமை

1.ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
2.துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
3.இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
4.உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
5.ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்
இந்திரனே சாலுங் கரி.
6.செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
7.சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
8.நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
9.குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
10.அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
3.நீத்தார் பெருமை
பற்றற்ற சான்றோர் பெருமை
1.ஒழுக்கமுடையார் பெருமை கூறும் நூல்களே சிறப்புக்குரியன என்பதே இறுதி முடிவு.
2.மனத்தை வென்ற துறவியரின் பெருமையை அளவிட்டு எண்ண இயலாது.
3.இருவகை உலகியலில் தெளிந்த துறவிகளின் பெருமையே சிறப்புடையது.
4.ஐம்புலன் அடக்கியவன் உழவர்க்குரிய விதைநெல்லுக்கு ஒப்பானவன்.
5.ஐம்புலன் அடக்கம் செய்தவன் ஆற்றலுக்கு தேவர் தலைவன் இந்திரனே சான்றாவான்.
6.பிறரால் முடியாத அரிய செயலைச் செய்பவரே பெரியவர். அவ்வாறு இயலாதவர்கள் சிறியவர்களே.
7.ஐம்புலனடக்கி மனத்தை வென்றவனிடம் உலகம் அடங்கும்
8.ஒழுக்கமுடைய துறவியரின் வாய்ச்சொற்களே அவரது பெருமையைக் காட்டும் மந்திரச் சொற்களாகும்.
9.நற்பண்பு கொண்ட சான்றோரின் சினம், ஒரு நொடிப் பெழுதும் பிறரால் தாங்க இயலாது.
பிற உயிரிடத்தும் அன்பு காட்டும் அருளாளரே அந்தணராவார்,
உரையாசிரியர்
தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர்
தமிழ்ச்செம்மல் பல்திறன்வளர்
இலக்கியமாமணி
முனைவர்
மு.க.அன்வர்பாட்சா
தமிழாசிரியர் (பணி நிறைவு
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments