
தாய்லந்தின் பிராச்சின்புரி (Prachinburi) பகுதியில் வெள்ளம் சூழ்ந்த கோவிலிலிருந்து 400 கிலோ எடையுள்ள முதலை பாதுகாப்பாக இடம் மாற்றப்பட்டுள்ளது.
பேங்காக் வெள்ளத்தால் வாட் ஃபோ தோங் (Wat Pho Thong) கோவில் வளாகத்தில் வெள்ளநீர் உயர்ந்தது.
வெள்ளநீர் தொடர்ந்து உயர்ந்தால் முதலை தப்பி ஆற்றுக்குள் சென்றுவிடலாம் என்று அஞ்சப்பட்டது.
நேற்று கோவில் நிர்வாகம் அதிகாரிகளிடம் உதவி கோரியது.
அதிகாரிகள் இடமாற்றப் பணியை மேற்கொண்டனர். உள்ளூர்வாசிகளும் உதவினர்.
முதலையின் வாயையும் கால்களையும் அதிகாரிகள் கயிற்றால் கட்டினர். பின்னர் அதைச் சாலைக்குக் கொண்டுவந்தனர்.
பாரந்தூக்கி பொருத்தப்பட்ட வாகனத்தின் உதவியுடன் முதலை மற்றொரு வாகனத்தில் ஏற்றப்பட்டது.
‘நுவா தோங்’ (Nuea Thong) என்ற அந்த முதலைக்கு வயது 27. அது நான்கு மீட்டருக்கும் அதிகமான நீளமும் சுமார் 400 கிலோ எடையும் கொண்டது.
சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளம் பாதிக்காத பகுதியில் உள்ள தற்காலிக இடத்துக்கு முதலை கொண்டுசெல்லப்பட்டது.
அதன் இடமாற்றத்தைத் தொடர்ந்து கோவில் தலைமைத் துறவி, அதிகாரிகள், குடியிருப்பாளர்கள் ஆகியோர் நிம்மதி அடைந்தனர்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments