Ticker

6/recent/ticker-posts

“ஆபத்தான முடிவு”: அமெரிக்காவைச் சாடிய வடகொரியா


தென் கொரியா அதன் முதல் அணுச்சக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலைத் தயாரிக்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியதை வடகொரியா சாடியிருக்கிறது.

அது குறித்து வடகொரிய வெளியுறவு அமைச்சு அறிக்கை வெளியிட்டது.

தென் கொரிய, அமெரிக்க தற்காப்பு உறவில் இது ஓர் ஆபத்தான முன்னேற்றம் என்று அது குறைகூறியது. அமெரிக்காவின் இந்த முடிவு மிகவும் ஆபத்தானது என்று வடகொரியா கூறியது.

ஆசிய பசிஃபிக் வட்டாரத்தின் அரசியல், ராணுவ நிலவரத்தில் இது புதுச் சிக்கலை ஏற்படுத்துவதாகப் பியோங்யாங் கூறியது.

AUKUS அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல் உடன்பாடு மூலம் அமெரிக்கா, அணுவாயுதப் பரவலுக்கு வழிவகுப்பதாக வடகொரிய வெளியுறவு அமைச்சு கூறியது.

ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் AUKUS தற்காப்புக் கூட்டணி மூலம் அணுச்சக்திப் பரவலுக்கு அமெரிக்கா வழிவகுப்பதாக வடகொரியா குற்றஞ்சாட்டியது.

அமெரிக்கா அணுவாயுதங்களை அதிகளவில் குவிப்பதால், உலக அணுச்சக்திக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அது கூறியது.

seithi


 


Post a Comment

0 Comments