Ticker

6/recent/ticker-posts

அறிமுகத்தில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற ஹெர்மன்

அறிமுக ஒருநாள் சர்வதேசப் போட்டியில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவராக தனது பெயரை தென்னாபிரிக்காவின் ஜோர்டான் ஹெர்மன் சேர்த்துக் கொண்டார்.

வின்ட்ஹொக்கில் புதன்கிழமை (09) நடைபெற்ற நமீபியாவுக்கெதிரான முதலாவது போட்டியிலேயே இச்சாதனையை ஹெர்மன் படைத்தார். இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா ஹெர்மன்னின் 150 (126), டொனி டி ஸொர்ஸியின் 72 (84), கொர்பின் பொஷ்ஷின் ஆட்டமிழக்காத 39 (24) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 348 ஓட்டங்களைப் பெற்றது.

இதற்கு முன்னரும் ஒருநாள் சர்வதேசப் போட்டி அறிமுகத்தில் அதிகூடிய ஓட்டங்களாக மத்தியூ பிறெட்ஸ்கே, நியூசிலாந்துக்கெதிராக கடந்தாண்டு 150 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பதிலுக்கு 349 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நமீபியா, 21.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 73 ஓட்டங்களைப் பெற்றிருக்கையிலும் 24 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 95 ஓட்டங்களைப் பெற்றிருக்கையிலும் மழை குறுக்கிட்டது.

அந்தவகையில் டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ன் முறைப்படி 31 ஓவர்களில் 262 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 31 ஓவர்களில் 8 விக்க்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களையே பெற்று 99 ஓட்டங்களால் நமீபியா தோல்வியடைந்தது. பந்துவீச்சில் பிரனலன் சுப்ரயன் 4, கவெனா மபஹா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

tamilmirror


 


Post a Comment

0 Comments