
பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதன் காரணமாக, தேரர் அத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியைச் சிறையில் கழிக்க நேரிடும் என பேராசிரியர் மற்றும் சட்டத்தரணி பிரதீபா மகாநாம ஹேவா தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொடவை, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் வைத்து 2016 ஆம் ஆண்டில் அச்சுறுத்தியதுடன், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்து நீதிமன்ற அவமதிப்பை ஏற்படுத்தியமை தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018 ஆகஸ்ட் 08 ஆம் திகதி ஞானசார தேரருக்கு ஆறு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும், அத்தீர்ப்புக்கு எதிராகத் தேரர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 05 ஆம் திகதி நிராகரித்ததாகவும் பேராசிரியர் கூறினார்.
இதற்கமைய, தேரர் சிறைத்தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்த வேளையில், 2019 ஆம் ஆண்டு மே 23 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டதாக மகாநாம ஹேவா தெரிவித்தார்.
இதன்படி, தேரர் ஒன்பது மாதங்கள் மட்டுமே சிறைவாசம் அனுபவித்ததாகக் குறிப்பிட்ட பேராசிரியர், அந்தப் பொதுமன்னிப்பு தவறானது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதன் காரணமாக, தண்டனையின் மீதமுள்ள காலப்பகுதியான ஐந்து வருடங்களும் மூன்று மாதங்களும் சிறைத்தண்டனையை அவர் அனுபவிக்க நேரிடும் எனத் தெரிவித்தார்.
இது தொடர்பில் நாம் மேற்கொண்ட வினவலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments