Ticker

6/recent/ticker-posts

ரஷ்யாவை வீழ்த்த உக்ரைனின் புதிய வியூகம்! ஆயுதம் வாங்க ஆபாசப் படங்களுக்கு அனுமதி?


உக்ரைன் நாடு ரஷ்யாவுடனான போருக்கான நிதித் தேவையை பூர்த்தி செய்ய, ஆபாசப் படத் தயாரிப்பு மற்றும் வயதுவந்தோருக்கான பொழுதுபோக்குத் துறையை (Adult Entertainment Industry) சட்டப்பூர்வமாக்கத் திட்டமிட்டு வருகிறது.

இதன் மூலம் நாட்டிற்கு 25 மில்லியன் அதாவது சுமார் ரூ. 210 கோடி வரை வரி வருவாய் கிடைக்கும் என்றும், அந்தப் பணத்தைக் கொண்டு போருக்கு தேவையான சுமார் 30,000 டிரோன்களை (Drones) வாங்க முடியும் என்றும் உக்ரைன் நாடாளுமன்ற நிதிக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் தற்போது ஆபாசப் படங்களைத் தயாரிப்பது, வைத்திருப்பது அல்லது விநியோகிப்பது சட்டவிரோதமான செயலாகும். மீறினால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இருப்பினும், 'OnlyFans' போன்ற தளங்கள் மூலம் ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள் வருமானம் ஈட்டி வருகின்றனர். 2023-ஆம் ஆண்டின் தரவுகளின்படி, உக்ரைனைச் சேர்ந்த 7,900 கிரியேட்டர்கள் மூலம் சுமார் 131 மில்லியனுக்கும் அதிகமாக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

சமீபகாலமாக உக்ரைன் வரித் துறை இந்த கிரியேட்டர்களிடம் இருந்து வரி வசூலிக்கத் தொடங்கியது. ஆனால், வருமானத்தை வெளிப்படையாக அறிவிக்கும் நபர்கள், பழைய ஆபாசத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு காவல்துறை நடவடிக்கைக்கு உள்ளாகின்றனர். வரி செலுத்தாவிட்டால் வரி ஏய்ப்பு வழக்கு, வரி செலுத்தினால் ஆபாசத் தடைச் சட்ட மீறல் வழக்கு என உருவாக்காளர்கள் ஒரு முரண்பாடான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தச் சட்டச் சிக்கலைப் பயன்படுத்தி சில காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் உருவாக்காளர்களிடம் பெருந்தொகையை லஞ்சமாகப் பெறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சுவித்லானா துவோர்னிகோவா என்ற பிரபல கன்டென்ட் கிரியேட்டரின் வீட்டில் சோதனையிட்ட காவல்துறையினர், லஞ்சம் கேட்டு மிரட்டியதாகவும், அதற்கு மறுத்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் இணையதளத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். தான் சுமார் 900,000 டாலர் வரை அரசுக்கு நேர்மையாக வரி செலுத்தியுள்ளதாகவும், தங்களை குற்றவாளிகளாக நடத்தக் கூடாது என்றும் அதில் குறிப்பிட்டார். இந்த மனுவிற்கு ஒரே வாரத்தில் 25,000-க்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

பொதுமக்களின் ஆதரவையும் போர் நிதித் தேவையும் கருத்தில் கொண்டு, இந்தத் துறையைச் சட்டப்பூர்வமாக்கும் மசோதா ஜூலை மாதம் நாடாளுமன்றத்தின் முதற்கட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. தற்போது இரண்டாம் கட்ட பரிசீலனைக்குக் காத்திருக்கிறது. நாட்டின் சட்ட அமைப்பை வீணடிக்காமல், வரியாக வரும் நிதியை நாட்டின் பாதுகாப்பிற்குப் பயன்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

news18


 


Post a Comment

0 Comments