Ticker

6/recent/ticker-posts

“நிழலுக்கும் ஒளி வேண்டும்”


நான் தூங்கியே பல மாதங்கள் கடந்தன,
நாம் மனம்விட்டு பேசியே பல வரங்கள் மறந்தன...
நிஜத்தில் உன்னோடு வாழ முடியவில்லை,
நினைவில் மட்டும் வாழ்ந்தால் என்ன பலன் சொல்லடி...

நிழலாக நீ என்னோடு வந்தாய்,
நெஞ்சுக்குள் ஆயிரம் கனவுகள் தந்தாய்,
நிழலும் கூட வருமே ஒளி இருந்தால்,
அந்த ஒளியும் இல்லை என்றால் என்ன செய்வேன்?

நாம் பேசிய வார்த்தைகள் இன்னும் கேட்குதே,
நீ சிரித்த சத்தம் நெஞ்சில் ஒலிக்குதே,
கண்மூடி உன்னைத் தேடும் ஒவ்வொரு இரவும்,
கண்ணீர்த் துளியாகி விடியுதே...

நிஜத்தில் உன்னைத் தொட முடியவில்லை,
நினைவில் உன்னை விட்டு விலக முடியவில்லை,
காதல் மட்டும் நெஞ்சில் உயிராய் இருக்க,
காலம் மட்டும் நம்மைத் தூரம் அழைத்துச் செல்கிறது...

நிழலாய் வந்த உன் காதலும் போய்விட்டதே,
ஒளியில்லா இரவில் என் மனமும் தேய்ந்துவிட்டதே,
நீ இல்லாத வாழ்க்கை எதற்காக எனத் தெரியவில்லை,
நினைவாக வாழும் இந்த உயிரும் ஓயவில்லை... 

ஜெயசூர்யர் ஜெயராணி
நெதர்லாந்து


 


Post a Comment

0 Comments